எம்ஜிஆரு எனக்கு துரோகம் செஞ்சிட்டாரு… அதிர வைத்த நம்பியார்..!

புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் எம்ஜிஆர். அவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்களைக் கவரும் விதத்தில்தான் இருக்கும். முக்கியமாக மனித வாழ்க்கையை செம்மையாகக் கொண்டு செல்வதற்குத் தேவையான அனைத்துத் தத்துவங்களும் தவறாமல்…

mgr, nambiyar

புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர் எம்ஜிஆர். அவருடைய படங்கள் எல்லாமே ரசிகர்களைக் கவரும் விதத்தில்தான் இருக்கும். முக்கியமாக மனித வாழ்க்கையை செம்மையாகக் கொண்டு செல்வதற்குத் தேவையான அனைத்துத் தத்துவங்களும் தவறாமல் இடம்பெறும்.

அதே நேரம் எம்ஜிஆர் படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை மிரட்டுவதில் வல்லவர் நம்பியார். இவர் எம்ஜிஆரைப் பற்றி ஒருமுறை துரோகம் செய்ததாக சொல்லி விட்டார். ஆனாலும் அது ரசிக்கும்படியாகவே இருந்தது. என்னன்னு பாருங்க.

எம்ஜிஆர், நம்பியார் நட்பு ஆழமானது. அதே சமயம் சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட சம்பவங்களும் நடந்தது உண்டு. நம்பியாரிடம் ஒருமுறை எம்ஜிஆர் உடனான கருத்து வேறுபாடுகளைப் பற்றி நிருபர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான்.

நம்பியாருக்கு எம்ஜிஆர் செய்த துரோகம்னு தலைப்பு வச்சு நான் சொல்றதை எழுதுங்கன்னு நம்பியார் சொல்ல அதிர்ச்சி அடைந்து விட்டார் அந்த நிருபர். ‘என்ன சொல்றீங்க?’ன்னு கேட்கவும், நம்பியார் அமைதியாக இப்படி சொல்கிறார். ‘எம்ஜிஆருன்னாலே அடுத்ததா நினைவுக்கு வருவது நம்பியார்.

அப்படி இருக்கும்போது நம்பியாரை அம்போன்னு விட்டுட்டு அரசியல்ல இறங்கி எம்ஜிஆர் மட்டும் முதல் அமைச்சர் ஆகிட்டாரே. இது என் நண்பன் நம்பியாருக்கு எம்ஜிஆர் செய்த துரோகம்தானே?’ என கேட்டுள்ளார் நம்பியார். எம்ஜிpஆருக்கு வில்லனாகவே பார்த்துப் பழகிய நம்பியாரை ஹீரோவாகவும் மாற்றியவர் எம்ஜிஆர். அந்த வகையில் எம்ஜிஆர் நடித்த படம் நினைத்ததை முடிப்பவன். அதுல தான் நம்பியார் ஹீரோ மாதிரி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.