நளினி தன் கணவரை விட்டு பிரிந்திருந்தாலும் அவரை தவிர என்னால் யரையும் நினைத்து பார்க்க முடியவில்லை அவரே தனது உலகம் என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
நளினியின் தந்தை திரைப்படத்தில் நடன இயக்குனராக பணிப்புரிந்தவர். அவர் மூலமாக படத்தில் நடிக்கும் பயணத்தை தொடங்கினார் நளினி. உயிருள்ளவரை உஷா, மனைவி சொல்லே மந்திரம், வீட்டுக்கு ஒரு கண்ணகி, வம்ச விளக்கு, 24 மணி நேரம் போன்ற பல ஹிட் படங்களில் காதாநாயகியாக நடித்துள்ளார். மோகன், கமல் , சத்தியராஜ், விஜயகாந்த், அர்ஜுன் போன்ற பல முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார்.
ராமராஜன் பற்றி மனம் திறந்து பேசிய நளினி
நடிகர் ராமராஜனை நளினி திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அருணா மற்றும் அருண் என இரட்டை குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்கு பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தனர்.
இவர்களின் பிரிவுக்கு காரணம் ஜோதிடம் எனவும் நளினி கூறிப்பிட்டிருந்தார். ஜோதிடத்தில் ராமராஜனின் வாழ்க்கை குழந்தைகளால் குறையும் என்பதால் குழந்தைகளை பிரிய மனம் இல்லாமல் கணவரை பிரிந்தேன். ஆனாலும், நாங்கள் குடும்பமாகத் தான் இருக்கிறோம் என்றும் கூறியுள்ளார்.
கதாநயகியை அடுத்து காமெடி ரோலில் நடிக்க ஆரம்பித்தார், லண்டன் படத்தில் வடிவேலுடன்சேர்ந்து வரும் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. மாபெரும் வெற்றி பெற்ற கோலங்கள் சீரியலில் கொடுமைக்கார மாமியாரின் தோற்றத்தில் தன் நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
வேற யாருக்கும் இடமில்லை
தற்போது நளினி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தனது காதல் குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார். நான் படங்களில் கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்த போது, நான் நடித்த 24 படத்திற்கு அவர் தான் உதவி இயக்குநராக இருந்தார் ராமராஜன். அப்போது அவருக்கு என் மீது காதல் வந்து, எனக்கு மேக் அப் போடும் பெண்ணிடம் காதல் கடிதத்தை கொடுத்து அனுப்புவார். சில நாட்களில் எனக்கும் அவர் மேல் காதல் வர வீட்டுக்கு வந்து பேச சொன்னேன்.
ஆனால் வீட்டில் சம்மதிக்காததால் ஒடி போய் கலயணம் பண்ணிகிட்டோம். ஒரு மாசம் யருக்கும் தெரியாம இருந்தோம் . பின்னர் எம்.ஜி.ஆர் என் வீட்டில் பேசி சமாதானப்படுத்தினார். 13 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தேன் பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் விவாகரத்தானது. திடீரென வாழ்க்கை அப்படி மாறும் என்று நினைத்து கூட பார்த்தது இல்லை. அவர் தான் என் உலகம் என்று இருந்தேன், இருந்தாலும் குழந்தைகளுக்காக வெறியுடன் உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். விவாகரத்தாகி 25 ஆண்டுகள் ஆன பின்னும் , என் கணவரின் இடத்தில் யாரையும் வைத்து பார்க்க முடியவில்லை என நளினி மனம் திறந்து பேசி உள்ளார்.