சினிமா வரலாற்றில் நடிகர்கள் மட்டுமே கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது. எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் என தமிழ் திரையுலகை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. இப்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று நயன்தாராவை கொண்டாடும் நாம் நடிகையர் திலகத்தை மறந்து விட்டோம். இந்திய சினிமாவின் முதல் லேடி சூப்பர்ஸ்டாரான நடிகையர் திலகம் சாவித்திரி கணேசனின் இறுதிக் காலங்கள் பற்றிய பதிவு.
ஆந்திராவில் பிறந்த சாவித்திரி ‘கல்யாணம் பண்ணிப்பார்’ திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். பின்னர் தொடர் ஹிட் படங்களில் நடித்து நடிகையர் திலகம் என்ற பெயரையும் பெற்றார். சிவாஜி, சாவித்திரி நடிப்பில் உருவான பாசமலர், திருவிளையாடல் படங்களை நாம் என்றும் மறக்க முடியாது.
தொடர்ந்து காதல் மன்னன் ஜெமினி கணேசனை மணந்தார். அதன்பின் உடல் நலக் குறைபாடு காரணமாக சினிமாவில் நடிப்பதை நிறுத்திய சாவித்திரி தன்னுடைய இறுதிக் காலங்களை கோமாவில் கழித்தார். சுயநினைவின்றி 19 மாதங்களாக படுக்கையில் கிடந்து இறந்தார்.
சாவித்திரியின் துன்பமான சூழல்களிலும், திரையுலகினர் சிலர், அவருக்கு பொருளாதார ரீதியிலும், உளவியல் ரீதியிலும் தம்மால் ஆன உதவிகளைச் செய்தே வந்தனர். எம்.ஜி.ஆர் கூட, கணிசமான தொகை கொடுத்து உதவியதாகவும் தகவல் உள்ளது. இப்பொருளாதார உதவிகளைச் சாவித்திரி, தக்கவைத்துக் கொள்ளாமல், உடனடியாக, அவற்றை தேவையின்றிச் செலவிட்டார். இதனால், அவருக்குப் பொருளாதார உதவிகள் செய்வதற்கு, பிறர் முன்வரவில்லை.
இப்படித்தான் நடிகர் திலகத்துக்கு ‘சிவாஜி‘ன்னு பெயர் வந்துச்சா? சுவராஸ்யமான வரலாற்றுத்தகவல்
பிறருடைய உளவியல் ரீதியிலான உதவிகளை, அவர்மனம் ஏற்றுக் கொள்ளவே இல்லை. வார்த்தைகளால் தேற்றமுடியாத அளவிற்குத் தான் மிகவும் நொடிந்துபோய்விட்டதாகவும், அடுத்தடுத்த தொடர் நம்பிக்கை துரோகங்களால் யாரையுமே நம்பவியலாதென்றும், மதுபோதையையே தனக்கு ஒரே ஆறுதலாகவும், அவர் கருதினார். சாவித்திரிக்கு இயல்பாகவே அமைந்திருந்த முரட்டுப் பிடிவாத குணமும், இதற்கு வலுவாக அமைந்ததுதான் துரதிா்ஷ்டவசமானது.
பெங்களூருவிலுள்ள தங்கும் விடுதியில், படப்பிடிப்பிற்காக வந்த சாவித்திரி, மயங்கி விழுந்தபோது, அதே தங்கும் விடுதியிலிருந்த சரோஜாதேவிதான், முன்விரோதம் கருதாமல், தொலைபேசி மூலமாக கர்நாடக முதல்வரை அணுகி, விபரம் தெரிவித்து, சாவித்திரிக்குச் சிறந்த சிகிச்சை பெற வழிவகுத்தது குறிப்பிடத்தக்கது.
நடிகர் எம்ஜிஆர் இடம் அதிக முத்தம் பெற்ற ஒரே ஹீரோ யாரு தெரியுமா?
இருந்தபோதிலும் சிகிச்சை பலனளிக்காமல் 1981-ம் ஆண்டு தன்னுடைய 46 வயதிலேயே இவ்வுலகை விட்டு மறைந்தார். இவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு கீர்த்தி சுரேஷ் நடித்த மகாநடி (தமிழில் நடிகையர் திலகம்) அவருடைய வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படமாக அமைந்திருந்து. நாக் அஸ்வின் இயக்கத்தில் 2018-ல் வெளியான இந்தத் திரைப்படத்தில் ஜெமினி கணேசன் கேரக்டரில் துல்கர் சல்மான் நடித்திருப்பார். கீர்த்தி சுரேஷ்க்கு இந்தப் படம் தேசிய விருது வாங்கிக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.