நானும் என் கணவர் கௌதம் கார்த்திக்கும் இரு துருவங்கள்… மனம் திறந்த மஞ்சிமா மோகன்…

மஞ்சிமா மோகன் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை ஆவார். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். 1990களில் இறுதி மற்றும் 2000 ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா…

manjima

மஞ்சிமா மோகன் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் நடித்து பிரபலமான நடிகை ஆவார். இவர் கேரளத்தின் பாலக்காட்டை பூர்வீகமாகக் கொண்டவர். 1990களில் இறுதி மற்றும் 2000 ஆரம்ப காலகட்டத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது சினிமா கேரியரை தொடங்கினார் மஞ்சிமா மோகன்.

2016 ஆம் ஆண்டு சிம்புவுடன் இணைந்து அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் மஞ்சிமா மோகன். முதல் படத்திலேயே நல்ல விமர்சனங்களை பெற்று அவரது நடிப்புக்கு பாராட்டுகளையும் பெற்றார். இவர் தமிழ் சினிமாவில் பிரபலமாகி ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

தமிழை விட மலையாளத்தில் அதிக படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மஞ்சிமா மோகன். தமிழில் தொடர்ந்து சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், களத்தில் சந்திப்போம், துக்ளக் தர்பார், எஃப் ஐ ஆர் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் மஞ்சிமா மோகன்.

பிறகு இவர் பிரபலமான நடிகர் கார்த்திக் அவர்களின் மகனான கௌதம் கார்த்திக்கை காதலித்து 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட மஞ்சிமா மோகன் தனது கணவர் கௌதம் கார்த்திகை பற்றி கூறியிருக்கிறார். அது என்னவென்று இனி காண்போம்.

மஞ்சிமா மோகன் கூறியது என்னவென்றால், என்னுடைய கணவரும் நானும் இரு துருவங்கள் எதிரதிர் ஆனவர்கள். எனக்கு பிடிக்கும் திரைப்படங்கள் மற்றும் சில விஷயங்கள் அவருக்கு பிடிக்காது. அவருக்கு பிடிக்கும் சில விஷயங்கள் எனக்கு பிடிக்காது. நாங்கள் இருவரும் வேறு வேறு ரசனைகள் கொண்டவர்களாக இருந்தாலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு அன்பாக இருக்கிறோம் என்று மனம் திறந்து பேசி இருக்கிறார் மஞ்சிமா மோகன்.