தீபா அக்கா என்று அழைக்கப்படும் தீபா சங்கர் சின்னத்திரை சன் டிவியில் ஒளிபரப்பான புகழ் பெற்ற ‘மெட்டி ஒலி’ தொடரில் நடித்து அறிமுகமானார். அதைத் தொடர்ந்து ‘கோலங்கள்’, ‘வாணி ராணி’, ‘சரவணன் மீனாட்சி’, ‘பாரதி கண்ணம்மா’, ‘பூவா தலையா’ போன்ற பல தொடர்களில் நடித்திம், நடித்துக் கொண்டும் இருக்கிறார் தீபா.
2009 ஆம் ஆண்டு வெளியான ‘மாயாண்டி குடும்பத்தார்’ என்ற திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். தனது வெள்ளிந்தியான முகத்தினாலும், பேச்சினாலும், எதார்த்தமான நடிப்பினாலும் மக்களின் மனதில் இடம் பிடித்தார். ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘சங்கத்தமிழன்’, ‘மண்டேலா’, ‘டாக்டர்’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’, ஆகிய திரைப்படங்கள் தீபா நடித்ததில் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.
இதில் ‘டாக்டர் ‘ திரைப்படத்தில் நடித்ததற்காக ‘SIIMA சிறந்த நகைச்சுவை நடிகை’ விருதைப் பெற்றார். பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார் தீபா. அந்த நிகழ்ச்சியின் மூலமாக தான் தீபா எவ்வளவு கலகலப்பானவர் என்று வெளிப்படையாக தெரிந்தது.
தற்போது ஒரு நேர்காணலில் கலந்துக் கொண்ட தீபா தன் அம்மாவைப் பற்றி கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார். அவர் கூறியது என்னவென்றால், என் அம்மா நான் நடிக்கணும் அப்டிங்கிறதுக்காக நிறைய விஷயம் பண்ணாங்க. நான் முதல்ல நடிச்ச தொடர் மெட்டி ஒலி தான். அந்த நேரத்தில ஆர்டிஸ்ட்ஸ் எல்லாரும் அவங்க அவங்க டிரஸ் எல்லாம் அவங்களே தச்சுக்கணும். எனக்காக என் அம்மா பதினைந்து பாவாடை, தாவணி, சட்டை தச்சு கொடுத்தாங்க.
கொரோனா காலகட்டத்திலே தான் என் அம்மா உயிர் போச்சு, அதுவும் என் கைய பிடிச்சிக்கிட்டு தான் உயிரை விட்டாங்க. என் அம்மா இறந்த அப்புறம் தான் என் வாழ்க்கையே மாறிடுச்சு. அம்மா தான் என் தெய்வம், அவங்க என்ன சுத்தி தான் இருக்காங்க. எல்லாரும் இன்னிக்கு தீபா அக்கா அப்டினு பாசமா கூப்பிட்றாங்க, நான் யாருனு இன்னிக்கு எல்லாருக்கும் தெரியுது. ஆனா அதைப் பாத்து சந்தோசப்பட அம்மா கூட இல்லையேன்னு வருத்தமா இருக்கு என்று கண்ணீர் மல்க பகிர்ந்துள்ளார் தீபா.