விஷால் தென்னிந்திய சினிமாவில் பணியாற்றும் பிரபலமான புகழ்பெற்ற நடிகர் ஆவார். இவரது தந்தை ஜிகே ரெட்டி பிரபலமான தயாரிப்பாளர். அதன் மூலம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு விஷாலுக்கு கிடைத்தது. ஆரம்பத்தில் நடிகர் அர்ஜுனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார் விஷால். 2004 ஆம் ஆண்டு செல்லமே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஷால்.
தொடர்ந்து சிவப்பதிகாரம், திமிரு போன்ற திரைப்படங்களில் நடித்தார் விஷால். 2007 ஆம் ஆண்டில் தாமிரபரணி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார் விஷால். தொடர்ந்து மலைக்கோட்டை, சத்யம், தோரணை, தீராத விளையாட்டுப் பிள்ளை, அவன் இவன் என வெற்றி திரைப்படங்களில் நடித்து 2010 கால கட்டத்தில் புகழின் உச்சியில் முன்னணி நடிகராக இருந்தார் விஷால்.
பின்னர் பட்டத்து யானை, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், ஆம்பள, பாயும்புலி, மருது, கத்தி சண்டை, துப்பறிவாளன் சண்டக்கோழி 2, மதகஜராஜா போன்ற பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் விஷால். தற்போது துப்பறிவாளன் 2 படத்தை அவரே இயக்கி நாயகனாகவும் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஷால் தன்னுடைய ஒரு நல்ல பழக்கத்தை பற்றி பகிர்ந்திருக்கிறார். அவர் கூறியது என்னவென்றால் நான் பீச் ஓரங்களுக்கு சென்று அங்கே படுத்து தூங்குபவர்களிடம் அவர்களின் கஷ்டத்தை கேட்டு அறிந்து கொள்வேன். அதுமட்டுமில்லாமல் யாராவது கஷ்டபடுபவர்களை பார்த்தால் என்னிடம் எவ்வளவு இருக்கிறதோ அதை எல்லாம் அவர்களிடம் கொடுத்து விடுவேன். அது மட்டுமில்லாமல் என்னுடன் வரும் நண்பர்கள் இடமும் பணத்தை பிடுங்கி வாங்கி கொடுத்து விடுவேன். இந்த ஒரு பழக்கத்தினால் என்னுடன் என்னுடைய நண்பர்கள் வெளியே வரவே பயப்படுவார்கள் என்று பகிர்ந்து இருக்கிறார் விஷால்.