தமிழில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 8 வது சீசனில் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் என அனைவரும் எதிர்பார்த்த TTF (Ticket to Finale Task) இந்த வாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை விளையாட்டாக பல போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் வலம் வந்தாலும் இனியுள்ள நாட்கள் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த வாரம் 10 டாஸ்க்குகள் வரை நடைபெறும் என தெரியும் நிலையில், இதில் வெற்றி பெறும் ஒருவர், நேரடியாக ஃபைனலுக்கும் தகுதி பெற முடியும். இதனால், மிக கடினமாக உழைத்து இனிமேல் வேடிக்கை காட்டிக் கொண்டிருக்காமல் ஃபைனலை குறிக்கோளாக வைத்து போட்டியாளர்கள் ஆட வேண்டுமென்றும் பார்வையாளர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.
இவங்களுக்கு ஓட்டு போடாதீங்க..
இதனிடையே, கடந்த வார இறுதியில் ஜெஃப்ரி மற்றும் அன்ஸிதா ஆகிய இருவரும் வெளியேறி இருந்தனர். அந்த சமயத்தில் தோன்றி இருந்த விஜய் சேதுபதி, அனைத்து போட்டியாளர்களிடமும், ‘உங்களுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. இந்த போட்டியாளர்களுக்கு மட்டும் ஓட்டு போட்டு விடாதீர்கள் என நீங்கள் நினைக்கும் நபர் யார்?’ என்ற கேள்வியை முன் வைத்தார்.
இதற்கு பதில் சொன்ன முத்துக்குமரன், “தயவு செய்து யாரும் சவுந்தர்யாவுக்கு வாக்களிக்க வேண்டாம் என நான் மக்களிடம் சொல்வேன். ஏனென்றால் இது ஒரு வீடு இருப்பதால் நாங்கள் பல இடங்களில் சிரிக்கிறோம், மகிழ்கிறோம். அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அதைத் தாண்டி நிறைய முக்கியமான நேரங்களில் இந்த பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து நிறைய விஷயங்களை நாங்கள் வெளியே கடக்கிறோம்.
சவுந்தர்யா பண்ற தப்பு
அந்த நேரத்தில் சீரியஸாக சில விஷயங்கள் பேச வேண்டி இருக்கிறது. அப்போது நாம் என்ன பேச வேண்டும் என்பதை நன்கு யோசித்து பேச வேண்டும். இது 12 பேர் இருக்கும் சபை இல்லை. கோடிக்கணக்கான மக்களின் சபை இது என்பதை யோசித்து மிக கவனமாக தங்களது திறனை மேம்படுத்தி நிறைய விஷயங்கள் பேசுகிறோம்.
அப்படி ஒரு உரையாடல் நடக்கும் போது அங்கிருந்து ஒதுங்குவதோ அல்லது அதற்கு சம்மந்தமில்லாத ஒரு விஷயத்தை செய்து தன் பக்கம் கவனம் ஈர்க்க நினைப்பதோ எனக்கு சரி என்றுபடவில்லை. அப்படி பார்க்கும் போது 84 நாட்களில் அனைவரும் போட்ட உழைப்புடன் ஒப்பிடும் போது வேறு ஏதோ சாதாரணமான விஷயங்களை செய்து இத்தனை தூரம் சவுந்தர்யா வந்து விட்டாரோ என எனக்கு தோன்றுகிறது.
அதனால் மக்கள் தங்களின் வாக்கை இந்த போட்டிக்காக யார் சீரியசாக இறங்கி உழைத்தார்களோ அவர்களுக்கு போடுங்கள் என கேட்டுக் கொள்கிறேன்” என முத்துக்குமரன் தெரிவித்தார். அவர் அப்படி சொல்லி முடித்ததும் அரங்கமே ஆர்ப்பரித்து கொண்டாடி இருந்தது.