மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் ஏராளமான திரைப்படங்களுக்கு இசையமைத்து உள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே. அதே போன்று அவர் ஒரு சில பாடல்களையும் பாடியுள்ளார். ஆனால் அவர் படங்களில் நடித்ததும் அதிலும் முதல் படமே அஜிதுடன் தான் என்பதும் பலரும் அறியாத தகவலாகும். எம்எஸ் விஸ்வநாதன் முதன் முதலாக அஜித் நடிப்பில் சரண் இயக்கத்தில் உருவான காதல் மன்னன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அஜித் ஒரு மேன்சனில் தங்கி இருக்கும் நிலையில் அந்த மேன்சனின் உரிமையாளராக எம்எஸ் விஸ்வநாதன் நடித்திருப்பார். காமெடி கலந்த இந்த கேரக்டரில் அவர் திருட்டு தம் அடிப்பது உள்பட பல காமெடி காட்சிகளில் விவேக்குடன் இணைந்து நடித்துள்ளார். இது அவரது முதல் படம் என்பது தெரியாத அளவுக்கு அவர் மிக இயல்பாக நடித்திருந்தார்.
எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும் போதே அப்படி ஒரு பாடல் எழுதிய வாலி! சுவாரசியமான தகவல்கள்!
அதே போல கமல்ஹாசன் மற்றும் பிரபுதேவா நடித்த காதலா காதலா என்ற திரைப்படத்தில் நடித்தார். முழுக்க முழுக்க காமெடி கதை அம்சம் கொண்ட இந்த படத்தில் எம்எஸ் விஸ்வநாதன் காமெடியில் கலக்கி இருப்பார் அடுத்ததாக எம்எஸ் விஸ்வநாதன் நடித்த படம் ரோஜாவனம். கார்த்திக் மாளவிகா நடித்த இந்த திரைப்படத்தில் எம்எஸ் விஸ்வநாதன் குணச்சித்திர கேரக்டரில் நடித்திருப்பார், இந்த கதாபாத்திரம் பலர் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
எழுத்தாளர் சுஜாதாவின் இத்தனை நாவல்கள் திரைப்படமாகி இருக்கிறதா? ரஜினி, கமல் நடித்த அனுபவங்கள்..!
அதன் பிறகு புது முகங்கள் நடித்த அன்பே வா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதன் பின்னர் அவர் சுந்தர் சி இயக்கத்தில் உருவான தகதிமிதா என்ற படத்தில் நடித்தார். இந்த படத்தில் எம்எஸ் விஸ்வநாதன் நாயகன் யுவா கிருஷ்ணாவின் தாத்தாவாக நடித்திருந்தார். அடுத்ததாக அவர் நடித்த திரைப்படம் மகாராஜா. இந்த படத்தில் நாசர், சத்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்திருக்க இதில் கதாநாயகியின் தாத்தாவாக எம்.எஸ். விஸ்வநாதன் நடித்திருப்பார்.
இதனை அடுத்து ரஜினி நடித்த தில்லுமுல்லு படத்தின் ரீமேக் படமான சிவா நடித்த தில்லு முல்லு படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான நிலையில் இந்த படத்திலும் எம் எஸ் விஸ்வநாதன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பார்.இப்படி மொத்தத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் எட்டு திரைப்படங்களில் நடித்துள்ளார். அதே ஒரு சில தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்.