பிரபல இசையமைப்பாளர் பரத்வாஜ் பாஜகவில் இணைவு

விழுதுகள் உள்ளிட்ட அந்நாளைய மெகா தொடர்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் அஜீத் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் சரண் இயக்கிய பார்த்தேன் ரசித்தேன், ஹரி இயக்கிய தமிழ் உள்ளிட்ட…

விழுதுகள் உள்ளிட்ட அந்நாளைய மெகா தொடர்களின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் அஜீத் நடித்த காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம் சரண் இயக்கிய பார்த்தேன் ரசித்தேன், ஹரி இயக்கிய தமிழ் உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து மியூசிக்கல் ஹிட் கொடுத்தவர் பரத்வாஜ்.

81d0e6210c7e424e860d6b7049b5c282

சேரன் நடிப்பில் வந்த பாண்டவர் பூமி, ஆட்டோகிராஃப் உள்ளிட்ட பல முக்கிய படங்களுக்கு இசையமைத்தவர் இவர்.

சில நாட்களாக அதிக படங்களுக்கு இவர் இசையமைப்பதில்லை. அப்படி இசைத்த படங்களின் பாடல்களும் சமீப நாட்களில் ஹிட் ஆகவில்லை.

இந்நிலையில் இன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் பரத்வாஜ் இணைந்தார் இவருடன் பாஜகவின் உறுப்பினர் இசையமைப்பாளர் கங்கை அமரன் உடன் இருந்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன