ஹீரோவை விட அதிக சம்பளம் பெற்ற இசையமைப்பாளர்.. எவ்வளவு சம்பளம் தெரியுமா?

By John A

Published:

ஒரு திரைப்படம் எடுப்பதற்குள் அதன் தயாரிப்பாளருக்குத் தான் தெரியும் பணம் எவ்வளவு தண்ணியாக செலவழியும் என்று. லைட் பாய் முதல் ஹீரோ வரை சம்பளச் செலவே பல கோடிகளைத் தாண்டும். மினிமம் பட்ஜெட் படங்கள் கூட இன்று 5கோடிக்குக் கீழ் தயாராவதில்லை. ஆனால் அதே படம் ஹிட் அடித்தால் தயாரிப்பாளர் நல்ல லாபம் பெறுவார். ஆனால் படம் தோல்வியுறும் போது தயாரிப்புச் செலவு கூட மிஞ்சாமல் மிகுந்த நஷ்டத்திற்கு உள்ளாகிவிடுவார் தயாரிப்பாளர்.

ரஜினி, விஜய், அஜித் போன்ற பெரிய நடிகர்கள் நடித்தால் படத்தின் பட்ஜெட்டில் 60லிருந்து 70 சதவீதம் அவர்களுக்கே கொடுக்கப்படும். மீதி இருக்கும் பணத்தில்தான் படத்தையே எடுப்பார்கள். அதனால்தான் தமிழ் திரைப்படங்கள் தொழில்நுட்ப ரீதியாக தரமாக உருவாவதில்லை என சொல்லப்படுகிறது.

அருகிலிருக்கும் கேரளத்திலோ, கர்நாடகாவிலோ, ஆந்திராவிலோ கூட இப்படியெல்லாம் இல்லை. பாகுபலி படத்தில் நடித்ததற்காக பிரபாஸ் வாங்கிய சம்பளம் ரூ.25 கோடி மட்டுமே. மம்முட்டி. மோகன்லால் ஆகியோர் கூட 25 கோடிக்கும் கீழ்தான் சம்பளம் பெறுகிறார்கள்.

இவ்வாறு ஹீரோக்கள் 50 கோடி, 100 கோடி என்று சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அந்தக் கால கட்டத்தில் ஹீரோவை விட அதிகம் சம்பளம் பெற்று மிரள வைத்துள்ளார் இசையமைப்பாளர் ஒருவர். அந்த காலத்தில் டி.ஆர்.பாப்பா என்கிற இசையமைப்பாளர் இருந்தார். அடிப்படையில் இவர் வயலின் வாசிக்கும் இசை கலைஞர்.

கில்லி ‘கொக்கர கொக்கரக்கோ‘ பாடல் இப்படித்தான் உருவாச்சா? அதென்ன சுராங்கனிகா மாலுகண்ணா வா..

1952ம் வருடம் மலையாளத்தில் உருவான ‘ஆத்மசாந்தி’ என்கிற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதே தலைப்பில் இப்படம் தமிழிலும் உருவானது. இந்த இரு படங்களையும் இயக்கியவர் ஜோசப் தலியத் எனும் இயக்குனர். இந்த படத்திற்கு ஜோசப் டி.ஆர்.பாப்பாவுக்கு கொடுத்த சம்பளம் ரூ15 ஆயிரம். அப்படத்தில் நடித்த ஹீரோவுக்கு கொடுத்த சம்பளம் ரூ.5 ஆயிரம் மட்டுமே.

இசைக்கலைஞர்களே ஒரு படத்தின் வெற்றிக்கு காரணமாக இருப்பவர்கள். அவர்களுக்குதான் அதிக சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என ஜோசப் சொன்னார். இந்த டி.ஆர் பாப்பா தமிழில் யார் ஜம்புலிங்கம், மறு பிறவி, வைரம், வாயில்லா பூச்சி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார்.
இந்த டி.ஆர்.பாப்பாதான் ஜெய்சங்கரை ஜோசப் தலியத்துக்கு அறிமுகம் செய்து வைத்தார். அப்படித்தான் ஜோசப் இயக்கிய ‘இரவும் பகலும்’ திரைப்படம் மூலம் ஜெய்சங்கர் அறிமுகமானார். இந்த படத்திற்கும் டி.ஆர்.பாப்பாதான் இசையமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.