‘தர்பார்’ படத்திற்கு இசையமைத்த அனிருத்துக்கு இசையமைப்பாளர் சங்கம் கண்டனம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ரிலீஸுக்காக கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது…


cbe1515e7f0e32607cddaa88073fd957

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படம் வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இந்த படத்தின் ரிலீஸுக்காக கோடிக்கணக்கான ரஜினி ரசிகர்கள் காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ‘தர்பார்’ படத்துக்கு இசையமைத்த அனிருத்துக்கு இசை அமைப்பாளர் சங்க தலைவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இதுகுறித்து இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா தெரிவித்ததாவது:

‘தர்பார்’ படத்துக்கு வெளிநாட்டு இசை கலைஞர்களை அனிருத் பயன்படுத்தியுள்ளார். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்றினாலும் உள்ளூர் ஆட்களையும் பயன்படுத்த வேண்டும் என சட்டம் உள்ளது. ஆனால் சங்கத்தை சேர்ந்த இசைக் கலைஞர்களை அனிருத் பயன்படுத்தவில்லை. தர்பார் படத்திற்கு குறைந்தது 450 பேர்களையாவது அவர் பயன்படுத்தியிருக்க வேண்டும். இதனால் பெப்சி மூலம் இசையமைப்பாளர் அனிருத் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’ என இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன