பிக் பாஸ் முடியவுள்ளதால், போட்டியாளர்கள் பிக் பாஸுடன் பேசலாம் என்று கமல்ஹாசன் கூற, அதன்படி ஒவ்வொரு போட்டியாளரும் கன்பெஷன் ரூமுக்குள் சென்று பேசினர்.
முதல் ஆளாக சென்ற சாண்டி உணர்ச்சி பொங்கப் பேசினார். அடுத்து உள்ளேவந்த லாஸ்லியாவிடம் பிக் பாஸ் கேள்விகள் கேட்டார். அவர் தழுதழுத்தவாறே ஆரம்பம் முதல் பேசினார்.
அடுத்து பேசிய முகினிடம், இந்த வீட்டினைப் பற்றி கூறுங்கள் என்றதும் ஆரம்பத்தில் நடந்த சண்டைகளால் எப்போது வெளியில் போவோம் என்று நினைப்பேன். ஆனால், இறுதியில் இப்போது போக மனமில்லை.
நான் நினைத்த பல விஷயங்களை தவறு என்று உணர்ந்தேன், அதுபோல் பல விஷயங்களை சரி என்று உணர்ந்தேன்.
சந்தோசமான விஷயமாகப் பார்த்தால் அந்நியனாகவே பார்ப்பார்கள் என்று நினைத்தேன். ஆனால், அனைவரும் சகோதரனாகவே நட்த்தினார்கள் என்றார்.
கட்டிலை உடைத்த சம்பவம், நாற்காலையை மேலே தூக்கியது மோசமான சம்பவம் ஆகும். நடந்த விஷயங்களை ரெக்கார்டு செய்து போட்டுக் காண்பிப்பதால் திருத்திக் கொள்ள முடிகிறது என்றார்.
ஆதரவு கொடுத்த தமிழக மக்களுக்கு நன்றி என்று உணர்வு பொங்கப் பேசினார்.