விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி மற்ற டிஆர்பிகளை அடித்து துவைத்து வேறு லெவலாக சென்று கொண்டிருக்கிறது.
தற்போது 4 போட்டியாளர்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி 100 வது நாளுக்குள் அடி எடுத்து வைத்துவிட்டது.
100ஆவது நாளில் போட்டியாளர்களுக்கு மிகப் பெரிய இன்ப அதிர்ச்சியினைக் கொடுக்க நினைத்த பிக் பாஸ், கார்டன் ஏரியாவை பார்ட்டி ஹால் போல் மாற்றினார்.
யாரோ வரப்போகிறார்கள் என்று போட்டியாளர்கள் காத்திருக்க, ஏர்டெல் சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் குழு உள்ளே வந்தது அவர்களுடன் சூப்பர் சிங்கர் புகழ் மணி அண்ட் பேண்ட்டும் உள்ளே வந்தது.
உள்ளே வந்த அவர்கள் போட்டியாளர்களுக்கு பிடித்த பாடலை பாடச் சொல்லி அவர்களை குஷிப்படுத்த பாடினர்.
முகினும், லோஸ்லியாவும் ஒரு பாடலுக்கு ஆடினர், அடுத்து ஷெரினை அழைத்த போட்டியாளர்கள் ஆடச் செய்தனர். முகினும் அப்போது ஒரு பாடலைப் பாடி அசத்தினார்.
இதனை பாத்திமா பாபு, மீரா, ரேஷ்மா, மோகன் வைத்யா ஆகியொரும் கண்டுகளித்து மகிழ்ந்தனர்.