இந்த வாரத்தின் தலைவரானார் முகின்!!

By Staff

Published:

நேற்றைய நிகழ்ச்சி “டசக்கு டசக்கு” என்ற பாடலோடு பிக் பாஸ் வீட்டின் பொழுது புலர்ந்தது.

கன்ஃபெஷன் ரூமுக்குள் அழைத்து அனைவரையும், மிளகாய் சாப்பிட வைத்து, அனைவரையும் கதறவிட்டார் பிக் பாஸ்.

e187a515eeea840219819696c0301112

அடுத்து இந்தியா கேட் பாசுமதி அரசு வழங்கும் ஒரு டாஸ்க்கினை கொடுத்தார் பிக் பாஸ். அதன்படி சாண்டி குக் என்று அறிவிக்கப்பட்டது, மற்றவர்கள் உதவி செய்ய சாண்டி சமைத்தார்.

அடுத்து தலைவர் பதவிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதில் முகின், சாண்டி, கவின் ஆகியோர் போட்டியிட தேர்வாகினர்.

மூவரையும் செல்லோடேப்பினால் ரோல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டது, கை, கால், உடல் முழுதும் ரோல் செய்யப்பட்டு, அவர்கள் கீழே படுத்தவாறே, உருண்டு மற்றொரு கோட்டினை அடைய வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன்படி தர்ஷன் சாண்டியை செல்லோடேப்பினால் ரோல் செய்ய, ஷெரின் கவினை செல்லோடேப்பினால் ரோல் செய்ய, லாஸ்லியா முகினை ரோல் செய்தார்.

அதிக மியூச்சுவல் காயினை பெற்ற, முகின் முதலாவதாக ஒடும்படி அறிவுறுத்தப்பட்டது. கோட்டினை ஒரு வழியாக மூவரும் அடைய, அப்படியே எழுந்துநிற்க வேண்டும் என்று கூறப்பட்டது.

அதன்படி முதல் ஆளாக முகின் முதல் ஆளாக எழுந்து நின்று டாஸ்க்கினை வென்று இந்த வாரத்தின் தலைவரானார்.

Leave a Comment