விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்சியில் நடித்து பிரபலமான புகழ் தற்போது மிஸ்டர் ஜூ கீப்பர் படத்தில் ஹிரோவாக அறிமுகமாகிறார். மேலும் அப்படதில் புகழ் உண்மையான புலியுடன் நடித்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
புகழ் தனது பயணத்தை அது இது எது, சிரிப்புடா போன்ற பல விஜய் டிவி நிகழ்சிகளில் இருந்து தொடங்கிரனார். அவர் பெரும்பாலும் பெண் வேடம் அணிந்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தினார். மேலும் குக் வித் கோமாளி நிகழ்சியில் புகழ் நகைச்சுவையாலும் தன் குறும்புதனத்தாலும் அனைவரின் மனதிலும் இடம்பிடித்தார். அதில் சிவாங்கி, ரம்யா பாண்டியன் உள்ளிட்டவர்களிடம் செய்த சேட்டை அனைவரையும் ஈர்த்தது.
மிஸ்டர் ஜூ கீப்பர் ஹீரோ புகழ்:
குக் வித் கோமாளியை தொடர்ந்து புகழுக்கு அதிக பட வாய்ப்புகள் வர தொடங்கியது. யானை, வீட்ல விசேஷம், வலிமை போன்ற பல படங்களில் அவர் சிறு நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். தற்போது குக்வித் கோமாளி இயக்கிய டைரக்டர் சுரேஷ் புகழை ஹிரோவாக வைத்து மிஸ்டர் ஜூ கிப்பர் என்ற படத்தை உருவாக்கியுள்ளார். சுரேஷ் என்னவளே, சீனியர் ஜூனியர் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சுரேஷ் இந்த படத்தை பற்றி என்னுடன் கலந்து பேசி விட்டு ஒரு வருஷமா ஆளயே காணோம் , பின்னர் புலி கிடச்சிடிச்சு வாங்கன்னு சொன்னர் அங்க போய் பாத்தா அம்புலன்ஸ்லாம் இருந்தது. அங்க ஒரு குருப் இவர் தான் புலி கூட நடிக்கப்போறாரான்னு பேசிக்கிட்டு இருந்தாங்க. புலியை பார்க்கும் போது பயப்படாமல் பார்த்து அது மேல படுக்க, பழக சொன்னார் இயக்குநர். நிஜப் புலியை எப்படி பயப்டாம பார்க்குறது அத பார்க்காமலே பயந்து பயந்து நடிச்சேன். புலிக்கு பல் விலக்கி விட சொல்றாங்க, கேக் ஊட்டிவிட சொல்றாங்க, அந்த புலி வாய பார்த்தா நானும் ஹீரோயினும் உள்ள போற அளவுக்கு பெருசா இருக்கு என புகழ் சிரிப்புடன் கூறினாலும் அவர் அதற்காக எந்த அளவிற்கு தன் உழைப்பை கொடுத்துள்ளார் என்பதையும் அந்த இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
எச்சிலை எடுத்தேன்:
பிரசாத் ஸ்டூடியோ எதிரில் உள்ள காவேரி தெருவில் ஒரு வாட்டர் வாஷ் கடையில் வண்டி கழுவிக்கொண்டும் அதே தெருவில் உள்ள முத்துலட்சுமி உணவகத்தில் எச்சிலை எடுத்துக்கொண்டு இருந்ததாகவும் கூறினார். ஆனால் இன்று பிரசாத் ஸ்டூடியோவில் என்னுடைய படத்தின் பேனர் வைக்கப்பட்டதை பார்த்து சந்தோஷம் அடைந்தேன் என மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.