ரத்தக்கண்ணீர் படம் மாதிரி இன்னொரு படம் இனி வராது. அதுல வர்ற எம்ஆர்.ராதா மாதிரி இனி யாரும் நடிக்கவும் முடியாது. படத்தில் ஒவ்வொரு காட்சியையும் தெறிக்க விட்டிருப்பார். இன்று வரை அவர் அந்தப் படத்தில் பேசிய டயலாக்குகள் மீம்ஸ்கள், ட்ரெண்ட்டுகளாகி வருகின்றன.
படத்தில் எம்.ஆர்.ராதாவை ஆட்டிப் படைப்பவர் எம்.என்.ராஜம். அவரைப் பார்த்து அடியே காந்தான்னு எம்ஆர்.ராதா பேசுற வசனம் மெய்சிலிர்க்க வைக்கும்.
1954ல் வெளியானது இந்தப் படம். கிருஷணன் – பஞ்சு என்ற இரட்டை இயக்குனர்கள் இயக்கிய படம். படத்திற்குக் கதை வசனம் எழுதியவர் திருவாரூர் தங்கராசு.
இந்தப் படத்தில் நடிக்க எம்ஆர்.ராதா நிறைய கண்டிஷன்களைப் போட்டாராம். ஆனால் எல்லாவற்றுக்கும் படத் தயாரிப்பாளர் நேஷனல் பிக்சர்ஸ் பி.ஏ.பெருமாள் சரி என்றே தலையாட்டினாராம். அப்படி என்னென்ன கண்டிஷன்கள்னு பார்ப்போமா…
சினிமாவுக்காக நாடகத்தை விட மாட்டேன். எனக்கு நாடகம் தான் பெரிசு. நாடகம் முடிஞ்சதும் தான் சூட்டிங் வருவேன். சம்மதமா என்றார். ‘அதுக்கென்ன தாராளமா வச்சிக்கலாம்’ என்றார் பெருமாள்.
நான் நாடக நடிகன். கேமராவின் இஷ்டத்துக்கு திரும்ப திரும்ப நடிக்க மாட்டேன். என் இஷ்டத்துக்குத் தான் கேமரா என்னை படம் பிடிக்கணும். என்ன சொல்றீங்கன்னு கேட்டார். ‘சரி’ன்னு சொன்னார் பெருமாள்.
சமீபத்துல வாசன் கே.பி.சுந்தராம்பாளுக்கு 1லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்துருக்காரு. நீங்க எனக்கு ஒண்ணே கால் லட்சம் தரணும்னு கேட்டார். ‘அதுக்கு என்ன தாராளமா தர்றோம்’னுட்டாரு பெருமாள். படம் வெளியாகி சக்கை போடு போட்டது.
அதுவரை நாடகங்கள் சினிமாவுக்கு ஒத்து வராது பிளாப் தான்னு வந்த நெகடிவ் விமர்சனங்கள் எல்லாமே நடிகவேளின் அசாத்திய நடிப்புக்கு முன்னால் அடிவாங்கின என்றே சொல்ல வேண்டும்.
படத்துல வர்ற ‘அடியே காந்தா…’ வசனம் இன்னும் எத்தனை ஆண்டுகளானாலும் நடிகவேளின் நடிப்பைப் பறைசாற்றும்.
நுனி நாக்கில் ஆங்கிலம், ஸ்டைலான வாக், தொப்பி, கூலிங் கிளாஸ்னு அசத்தலாக வரும் எம்.ஆர்.ராதா மூடநம்பிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் சவுக்கடி கொடுப்பது போல வசனங்கள் பேசி ஆத்திகரையும் கவர்ந்து விடுவார்.
படத்திற்கு இசை சிஎஸ்.ஜெயராமன். பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர்ஹிட். இப்படி ஒரு அபாரமான நடிப்பை இதுவரை பார்த்ததே இல்லை என்று சொல்ல வைத்துவிட்டார் நடிகவேள். இவருடன் இணைந்து எஸ்எஸ்ஆர், சந்திரபாபு, அங்கமுத்து, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படம் இமாலய வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.