ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் ஆக்‌ஷன் திரைப்படம்! மிஸ் பண்ணிடாதீங்க

By Chandra R

Published:

ஓடிடியில் அதிகம் பார்க்கப்படும் ஒரு ஆக்‌ஷன் படத்தை பற்றிய செய்திதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. பல படங்கள் திரைக்கு வந்தாலும் சென்சார் அது இதுனு சில படங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த சில காட்சிகள் படத்தில் வெட்டி எடுக்கப்பட்டு விடுகின்றன. அதனால் அந்தப் படங்களின் சுவாரஸ்யமே குறைந்து போக வாய்ப்புள்ளது.

ஆனால் ஓடிடியை பொறுத்தவரைக்கும் எந்தவொரு சென்சார் கட்டுப்பாடும் கிடையாது. வன்மம், கொலை, கொள்ளை என பயங்கரமான காட்சிகளாக இருந்தாலும் அதை அப்படியே ஒளிபரப்படும். அந்த வகையில் ஓடிடியில் கடந்த ஜூலை மாதம் வெளியான திரைப்படம்தான் கில். முழு ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த படமான இந்த கில் திரைப்படத்தை ஓடிடியில் அதிகம் பேர் பார்த்த ஆக்‌ஷன் படமாக வரவேற்பை பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் லக்‌ஷயா மற்றும் ராகவ் ஆகியோர் லீடு ரோலில் நடித்திருக்கின்றனர். தன்யாவும் ஒரு முக்கியமாக கேரக்டரில் நடித்துள்ளார். அதுபோக ஆஷிஷ் வித்யார்த்தியும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம்தான் அதிக பார்வையாளர்களை கவர்ந்த திரைப்படமாக மாறியுள்ளது.

கில் திரைப்படத்தில் ரிவியூவுக்கு நல்ல ஒரு வரவேற்பு கிடைத்திருந்தது. படத்தில் கமேண்டராக லக்‌ஷயா நடித்திருப்பார். அப்போது ஹீரோயின் தன்யாவும் லக்‌ஷயாவும் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு போகிற ரயிலில் ஏறுகிறார்கள். அதே ரயிலில் ஒரு கொள்ளைக் கும்பலும் இருக்க ஹீரோவுக்கும் அந்த கொள்ளைக் கும்பலுக்கும் சண்டை வருகிறது.

அதிலிருந்து படம் முடியும் வரைக்கும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் கதை டிராவல் ஆகிறது.ஆனால் இதில் முக்கியமான விஷயம் என்னவெனில் இதயம் பலவீனமானவர்களால் இந்தப் படத்தை அவ்வளவு எளிதாக பார்த்துவிட முடியாது. கொள்ளையர்கள் படு பயங்கரமாக கொலை செய்யப்படுவது சில பேருக்கு சங்கடத்தை கொடுக்கலாம்.

இந்தப் படம் டிஸ்னி ஹாட் ஸ்டார் ப்ளஸ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகியிருக்கின்றது. படங்கள் மற்றும் இணைய தளங்களுக்கு ரேட்டிங் கொடுக்கும் நிறுவனமான imdp இந்தப் படத்திற்கு நல்ல ஒரு ரேட்டிங்கை கொடுத்திருக்கிறது. அதனால் ஆக்‌ஷன் படத்தை விரும்பி பார்ப்பவர்கள் இந்தப் படத்தை மிஸ் பண்ணவேண்டாம்.

மேலும் உங்களுக்காக...