பிரபல கன்னட நடிகை ஒருவர் 14.8 கிலோ தங்கம் கடத்தியதாக காவல்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல கன்னட நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் இருந்து 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
நேற்று, எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாயில் இருந்து பெங்களூருக்கு வந்த ரம்யா ராவ் காவல்துறை கண்காணிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. அவர் பலமுறை தங்கம் கடத்தியதாக தகவல் கிடைத்ததை அடுத்து, காவல்துறை மற்றும் சுங்கத்துறையினர் அவரை தீவிரமாக கண்காணித்தனர்.
பெரும்பாலும், அவர் உடலில் தங்கத்தை அணிந்து, அதனை தனது உடையால் மறைத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், கர்நாடக மாநில டிஜிபியின் உத்தரவின்பேரில், காவல்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், நேற்று பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த அவரை சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
பெண் போலீசார் அவரை சோதனை செய்தபோது, 14.8 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 15 நாட்களில், அவர் நான்கு முறை துபாய் பயணம் செய்திருந்ததை அடிப்படையாக கொண்டு, காவல்துறை அவரை கண்காணிக்கத் தொடங்கிய நிலையில் தான் நேற்று பெங்களூரு விமான நிலையத்தில் அவர் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதன்பின் கைது செய்யப்பட்ட ரன்யாவை பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய நிலையில், அவரிடம் தீவிர விசாரணை செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ஒரு பிரபல நடிகை தங்கம் கடத்திய தகவல், கண்டடத்துறை உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
