AR Rahman | ஏ.ஆர்.ரஹ்மானின் Bassistஆக பணிபுரியும் மோகினி டே கணவரை பிரிவதாக அறிவிப்பு

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் Bassistஆக பணிபுரியும் மோகினி டே தனது கணவரை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். தனது கணவர் மார்க்கை பிரிந்துவிட்டதாக கூறியுள்ளார். பரஸ்பரம் சம்மதத்துடன் இருவரும் விவாகரத்து கேட்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.…

Mohini Dey, who works as A.R. Rahman's bassist, announces separation from her husband

சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் Bassistஆக பணிபுரியும் மோகினி டே தனது கணவரை பிரிவதாக சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். தனது கணவர் மார்க்கை பிரிந்துவிட்டதாக கூறியுள்ளார். பரஸ்பரம் சம்மதத்துடன் இருவரும் விவாகரத்து கேட்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த மோகினி டே இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்ரூப்பை சேர்ந்தவர் ஆவார். இவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுடன் சேர்ந்து உலக அளவில் 40 இசை நிகழ்ச்சிகளில் பேஸ் கிடார் வாசித்திருக்கிறார்.

இந்நிலையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை பிரிவதாக அவரரது மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ள நிலையில், அடுத்த சில மணி நேரத்தில் கிட்டார் கலைஞரான மோகினி டே தன் கணவரை பிரிவது குறித்து இன்ஸ்டாகிராமில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். மோகினியும், அவரின் கணவர் மார்க் ஹார்ட்சச்சும் கூட்டாக சேர்ந்து இன்ஸ்டாகிராமில் கூறுகையில், நானும், மார்க்கும் பிரிந்துவிட்டோம் என்பதை கனத்த இதயத்துடன் இதனை தெரிவித்துக் கொள்கிறோம். நாங்கள் இருவரும் பேசி மனமொத்து இந்த முடிவை எடுத்திருக்கிறோம். எங்களுக்கு வாழ்க்கையில் வெவ்வேறு விஷயம் பிடித்திருக்கிறது. அதனால் மனமொத்து பிரிந்துவிடுவது தான் சரி என்கிற முடிவுக்கு வந்திருக்கிறோம்

இனி நாங்கள் நண்பர்களாக இருப்போம். MaMoGi, மோகினி டே குரூப்ஸ் உள்ளிட்ட பல ப்ராஜெக்டுகளில் சேர்ந்தே நாங்கள் வேலை செய்வோம். நாங்கள் நன்றாக சேர்ந்து வேலை செய்வதில் எப்பொழுதுமே பெருமையாக இருக்கும். எனவே அது தற்போதைக்கு நிற்காது.

உங்களின் அனைவருடைய ஆதரவுக்கு நன்றி. நாங்கள் எடுத்த முடிவை தயவு செய்து கவுரவித்து இந்த நேரத்தில் எங்களிடம் பாசிட்டிவாக இருக்க வேண்டுகிறேன்.. எங்களின் தனிப்பட்ட சுயவிருப்பங்களை நீங்கள் மதிக்க வேண்டுகிறோம்.. நீங்கள் எதையும் தவறாக கணிக்காமல் இருந்தால் நன்றாக இருக்கும் ” என்று கூறியுள்ளனர்.