மோகனை பிரபலபடுத்திய மகேந்திரன் படம்

By Staff

Published:


ed2fe2a396e9fe372ad1060c438b6df5-2

நடிகர் மோகனை அறியாதோர் சினிமாவில் இல்லை. எண்பதுகளில் பல திரைப்படங்களில் நடித்து வெள்ளிக்கிழமை தோறும் வந்த படங்களை எல்லாம் வெள்ளிவிழா படங்களாக மாற்றியவர் மோகன்.

பெங்களூருவை பூர்விகமாக கொண்ட மோகனுக்கு கன்னடத்தில் நடித்த கோகிலா படமே சிறந்த படமாக அமைந்தது.

பின்பு பாலுமகேந்திராவின் மூடு பனி படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருப்பார். அதன் பிறகு மகேந்திரன் இயக்கிய நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில்தான் முழு கதாநாயகனாக அறிமுகமானார். அதில் ஜோடியாக நடித்தவர் சுஹாசினி. இவரும் இந்த படத்தில்தான் அறிமுகமானார்.

மோகன் ஹிட் படத்தில் நடித்து 25 வருடத்துக்கும் மேல் ஆகிவிட்ட நிலையில் அவர் படங்கள் இன்றும் பேசப்படுவதற்கும் மோகன் என்ற ஒரு சிறந்த நடிகர் இருந்தார் என்பதற்கும் முழு முதற் காரணம் இயக்குனர் மகேந்திரன் அவர்களே காரணம்.

இந்த படத்தில் இடம்பெற்ற பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலை இன்று வரை ரசித்து கேட்காத காதலர்கள் யாரும் இல்லை.

இன்று மறைந்த மகேந்திரன் உடலுக்கு அவரின் சீடரான நடிகர் மோகனும் வந்து அஞ்சலி செலுத்தினார்.

Leave a Comment