எண்பதுகளில் முன்னணி நடிகர் மோகன். பயணங்கள் முடிவதில்லை, உதயகீதம், மெளனராகம், இதயக்கோவில், மெல்லதிறந்தது கதவு என பல படங்களில் நடித்து இன்றளவும் நிறைய ரசிகர்களை வைத்துள்ளார்.
இவரின் படங்களுக்கு இசையமைத்தது பெரும்பாலும் இசைஞானி இளையராஜாதான். இவரின் படங்களில் பாடல்கள் எல்லாம் ஹிட் தான்.
வெள்ளி ஆனாலே வெள்ளி விழா நாயகன் மோகனின் படங்கள்தான் வந்து குவியும் அப்படி ஒரு காலம் இருந்தது மிக பிஸியாக இருந்தார். பின்பு அவருக்கும் ஒரு கட்டத்தில் மார்க்கெட் போனது.
மோகனை பற்றி நடிகை குஷ்பு ஒரு டுவிட் இட்டுள்ளார். மோகனின் மார்க்கெட் இறுதிக்கட்டத்தை நெருங்கி கொண்டிருக்கும்போதுதான் குஷ்பு சினிமாவில் நடிக்க வந்தார். அவர் இட்டுள்ள ஒரு டுவிட்
இந்த மனிதனை நான் எப்படி வெறுக்க விரும்புகிறேன் .. # மோகன் அவரிடம் சிறந்த பாடல்களும் சிறந்த ஸ்கிரிப்ட்களும் இருந்தன .. ஸ்கிரிப்டுகளுக்காக படங்கள் செய்த ஒரு நடிகர்..நான் அவரைப் போன்ற நடிகர்களைக் காணவில்லை என குறிப்பிட்டு ஒரு பாடலை பதிவேற்றியுள்ளார்.
அப்பாடலின் உள்ளே சுந்தர் சி ஜாலிக்காக வேண்டுமென்றே மோகன் சார் ஐ ஹேட் யூ என கத்துவது போல் உள்ளது.