நம்பியார் சிவாஜிக்கு கொடுக்க ஆசைப்பட்டது  என்னன்னு தெரியுமா? அடேங்கப்பா எங்கேயோ போயிட்டாரே..!

ஒருமுறை நடிகர் திலகம் சிவாஜி குறித்து எம்என்.நம்பியார் தனது கருத்துகளை வெளிப்படையாக இப்படி சொல்லி இருக்கிறார். அவர் மனம் எவ்வளவு இனிமையானது என்பது இதிலிருந்தே தெரிகிறது. வாங்க என்ன சொன்னாருன்னு பார்ப்போம்.

சிவாஜி நடித்த உத்தமபுத்திரன் படத்தில் நான் அவருக்கு ஆலோசனை சொல்ற வேடத்துல நடிச்சிருப்பேன். அவரைப் பற்றி சொல்லணும்னா உலகத்துல இருக்குற நடிகர்களிலே தலைசிறந்தவர் யாரோ அவர்களுக்கு எல்லாமே தலைசிறந்தவர் தான் அவர்.

உத்தமபுத்திரன் படத்தில் ஹீரோ, வில்லன் என இரட்டை வேடங்களில் நடித்து இருந்தார். அவர் மட்டும் தொடர்ந்து வில்லனா நடிச்சிருந்தா எனக்கு வேலையே இல்லாம போயிருக்கும்.

யயாதி மகாராஜா என்று ஒரு மன்னர் இருந்தார். அவர் இந்திரலோகத்தில் இருக்குற தேவர்கள் மாதிரி அவர் இளமையா வாழ ஆசைப்பட்டார். அதற்கு அவரது பிள்ளைகளில் யாராவது ஒருத்தர் தன்னோட இளமையை அவருக்குத் தந்தால் அவர் இளமையுடன் வாழ முடியும் என்ற ஒரு முனிவர் அவருக்க வரத்தைக் கொடுத்தாராம். ஆனால் எந்தப் பிள்ளைள தான் தன்னோட இளமையைத் தரும்? நீங்களே சொல்லுங்கள் பார்க்கலாம்.

Uthamaputhiran
Uthamaputhiran

அவர் பெற்ற பிள்ளைகளில் விகாரமாக இருந்த ஒரு பிள்ளையை மட்டும் அவர் வெறுத்து ஒதுக்கினார். அதைப் பார்க்கும் போது தெய்வமகன் கதை போல இருந்தது. ஆனால் அந்தப் பிள்ளை தான் தன்னோட இளமையை தந்தைக்குத் தந்ததாக புராணக்கதையில் சொல்வார்கள்.

யயாதி மகாராஜாவின் நிலையில் சிவாஜி இருந்து இருந்தால், நான் என் இளமையைத் தந்து இருப்பேன் என்று நம்பியார் சொன்னாராம். அடேங்கப்பா எவ்ளோ நல்ல உள்ளம் கொண்டவரா இருக்காரு நம்மோட வில்லன்.

இதுல இருந்து நமக்கு என்ன தெரியுதுன்னா யாரையும் ஆளைப் பார்த்து எடை போடக்கூடாது. பலாப்பழம் வெளியில் அதன் தோலைப் பார்த்தால் முள்ளாகத் தான் இருக்கும். அதன் உள்ளே சுளையைப் பாருங்கள். எவ்வளவு இனிப்பாக இருக்கிறது என்று. அப்படித்தான் சினிமாவில் கொடூரமான வில்லனாக நம்பியார் நடித்த போதும் அவரது மனம் எப்போதும் இன்சுவை உடையது தான்.