சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’தர்பார்’ திரைப்படத்தை சமீபத்தில் முக ஸ்டாலின் பார்த்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. ஆனால் அவர் இந்த படம் குறித்து எந்தவித கருத்தையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே தனுஷ் அசுரன் படம் பார்த்து தெரிவித்த கருத்துக்களினால் ஏற்பட்ட பிரச்சினையை இன்னும் திமுகவால் சமாளிக்க முடியவில்லை. எனவே தர்பார் படம் பார்த்துவிட்டு அவர் எந்தவித கருத்தையும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது
இருப்பினும் தர்பார் படம் நன்றாக இருந்ததாக தன்னிடம் முக ஸ்டாலின் கூறினார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ் அழகிரி அவர்கள் இன்று தனது பேட்டியில் கூறியுள்ளார்
மேலும் துக்ளக் விழாவில் ரஜினி பேசியது தவறுதான் என்றும் இருப்பினும் அவர் திட்டமிட்டு அவ்வாறு பேசி இருக்க மாட்டார் என்றும் வாய்தவறி பேசி இருப்பார் என்றும் ஏனெனில் அவர் நல்லவர் என்றும் கே எஸ் அழகிரி மேலும் தெரிவித்தார்