ஆக்சன் ஹீரோவாக மாறாததற்கு இதுதான் காரணமா? மோகன் சொன்ன சீக்ரெட்!

மைக் மோகன் இவரை எக்காலத்திற்கும் மறக்க முடியாது. 80 காலகட்டத்தில் ஒரு லவ்வர் பாயாக சார்மிங் ஹீரோவாக குறிப்பாக பெண் ரசிகைகளை மிகவும் கவர்ந்த ஒரு கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார் மைக்…

mic mohan goat

மைக் மோகன் இவரை எக்காலத்திற்கும் மறக்க முடியாது. 80 காலகட்டத்தில் ஒரு லவ்வர் பாயாக சார்மிங் ஹீரோவாக குறிப்பாக பெண் ரசிகைகளை மிகவும் கவர்ந்த ஒரு கனவு நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தார் மைக் மோகன்.

அதுவரை ரஜினி கமல் இவர்களையே பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு ஒரு புது முகமாக மோகனை இந்த தமிழ் சினிமா அடையாளம் காட்டியது. சிரித்த முகம் அழகான பற்கள் என அனைவருமே விரும்பும் ஒரு தோற்றத்தில் மோகன் இந்த சினிமாவில் அடி எடுத்து வைத்தார்.

அதற்கு ஏற்ற வகையில் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெள்ளிவிழாவாக அமைந்தது தான் இவருடைய கூடுதல் சிறப்பம்சம். அதிலிருந்து இவரை வெள்ளி விழா நாயகன் என்றே அழைத்து வந்தனர். ஒரு சில படங்களில் மைக்கை பிடித்து பாடி நடித்ததன் மூலம் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார்.

இந்த நிலையில் இவர் பெரும்பாலும் ஆக்சன் சார்ந்த படங்களில் நடித்திருக்க மாட்டார். ஆனால் இப்போது உள்ள நடிகர்கள் நான்கு படங்களில் நடித்த பிறகு ஒரு ஆக்சன் ஹீரோவாக தன்னை பிரதிபலித்துக் கொள்கிறார்கள். ஆனால் அந்த காலத்தில் ரஜினி கமல் ஒரு ஆக்சன் ஹீரோவாக ஜொலித்தாலும் மோகனை அந்த அளவுக்கு ரசிகர்கள் படங்களில் பார்க்கவில்லை.

அது ஏன் என அவரிடம் இந்த கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மோகன் அது கதையின் காரணமாகத்தான் இருக்கும். கதைக்குத் தேவைப்பட்டால் மட்டுமே நடித்திருப்பேன். அதற்காக முழு ஆக்க்ஷன் படம் என்றால் அது சரியாகவும் இருக்காது.

உதாரணமாக நூறாவது நாள் படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் நானும் விஜயகாந்தும் ஒரு சண்டைக்காட்சியில் நடித்திருப்போம். அந்த காட்சியை மணிவண்ணன் தத்ரூபமாக எடுத்திருப்பார். அது அந்த கதைக்கு தேவைப்பட்டது.

அதனால் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு அற்புதமான சண்டைக் காட்சியில் நாங்கள் இருவரும் நடித்திருப்போம்.இப்படி கதைக்கு காரணமாக கதைக்கு தேவைப்பட்டால் மட்டுமே தான் நான் நடித்திருப்பேன் என மோகன் கூறியிருக்கிறார்.