திரையுலகில் ரசிகர்கள் மனதில் இன்றும் நீங்க இடத்தைப் பிடித்தவர்கள் என்றால் அதில் முக்கியமானவர்கள் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். சினிமாவில் இருவரும் இரண்டு துருவங்களாக விளங்கினர். சண்டை காட்சிகள் மற்றும் நடனங்களில் எம்ஜிஆர் வெளுத்து வாங்கினால் தனது கதாபாத்திரங்கள் மற்றும் வசனங்களில் தூள் கிளப்புபவர் சிவாஜி கணேசன். இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் கிடையாது.
பொதுவாக திரைத்துறையில் ஒரு நடிகர் மற்றொரு நடிகரை புகழ்ந்து பேசுவது மிகவும் அரிதான சம்பவம் ஆனால் எம்ஜிஆர் சிவாஜியும் ஒருபோதும் அப்படி இருந்ததில்லை. இவர்கள் இருவர் இடையே எந்த விதமான ஈகோவும் இருந்தது இல்லை. எம்ஜிஆர் என்றாலே அண்ணன் என்று பாசமாக பேசும் சிவாஜியும் எந்த மேடையிலும் சிவாஜியை பாராட்டும் எம்ஜிஆரும் ஒருவருக்கொருவர் போட்டியாக நினைத்ததில்லை.
இதையும் வாசிக்க: ஒரே படத்தில் 11 அவதாரம்… நம்பியார் ஃப்ர்ஸ்ட் கமல் நெக்ஸ்ட்… எந்த படம் தெரியுமா…..?
ஒரு முறை பாடலாசிரியர் வாலி அவர்கள் எம்ஜிஆரிடம் அன்னையின் ஆணை திரைப்படத்தில் அசோக மன்னனாக நடித்திருந்த சிவாஜி கணேசன் பற்றி பேசுகையில் சிவாஜி போல் ஒரு நடிகர் இங்கே யாரும் இல்லை என கூறியது மட்டும் இல்லாமல் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று சட்டென கேட்டு விட்டார். ஆனால் அதன் பிறகு தான் கேட்ட கேள்வி எம்ஜிஆரின் ஈகோவை தூண்டி விடுமோ என பயந்துள்ளார்.
எம்ஜிஆர் எந்த சலனமும் இல்லாமல் வாலி அவர்கள் கூறியது உண்மை என்று கூறியதோடு சிவாஜி கணேசன் போன்ற நடிகர் இங்கு இல்லை. ஆனால் சிவாஜி கணேசனுக்கு அடுத்ததாக ஒருவர் இருக்கிறார் அவர்தான் முத்துராமன் எனக் கூறியுள்ளார். 1954 ஆம் ஆண்டு வெளியான கூண்டுக்கிளி திரைப்படத்தில் சிவாஜி கணேசன் எம்ஜிஆர் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.