இயக்குநர் லிங்குசாமியைக் கதற வைத்த மம்முட்டி.. ஆனந்தம் பட டப்பிங்-ல் நடந்த சுவாரஸ்ய சம்பவம்..

தமிழ் சினிமாவின் குடும்பக் கதை நாயகன் என்று புகழப்படும் இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராகப் பணியாற்றி பின்னர் கடந்த 2001-ம் ஆண்டு ஆனந்தம் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக உயர்ந்தவர்தான் லிங்குசாமி. தனது குருவைப் போன்று…

Anandam Mammooty

தமிழ் சினிமாவின் குடும்பக் கதை நாயகன் என்று புகழப்படும் இயக்குநர் விக்ரமனிடம் உதவியாளராகப் பணியாற்றி பின்னர் கடந்த 2001-ம் ஆண்டு ஆனந்தம் என்ற படத்தின் மூலமாக இயக்குநராக உயர்ந்தவர்தான் லிங்குசாமி. தனது குருவைப் போன்று முதல் படமே குடும்பக் கதை, சென்டிமெண்ட், காதல் என அனைத்து ஏரியாவிலும் கலக்கி சூப்பர்ஹிட் குடும்பப் படத்தினைக் கொடுத்தார். இப்படத்தினை ஆர்.பி. சௌத்ரி தயாரித்திருந்தார். மேலும் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் பாடல்கள் சூப்பர்ஹிட் ஆனது. பாடலாசிரியராக யுகபாரதியும் இந்தப் படத்தில் தான் அறிமுகமானார்.

இப்படத்தில் மம்முட்டி மூன்று தம்பிகளின் மூத்த அண்ணனாக நடித்திருப்பார். குடும்பப் பொறுப்பு, மரியாதை என அனைத்தும் கலந்த கலவையாக மம்முட்டியின் நடிப்பு அட்டகாசமாக இருக்கும். இப்படத்தின் ஒரு காட்சியில் முரளியின் குழந்தை சிகிச்சைக்காக பணம் சேர்த்து வைக்கும் போது அதனை ரம்பா சந்தேகப்படும் காட்சியில் மம்முட்டியின் வசனம் இந்தப் பணம் என்னான்னு தெரிஞ்சா தாங்க மாட்டீங்கடா என்று தழுதழுத்த குரலில் பேசியிருப்பார்.

இந்த காஸ்ட்டியூமை உடனே மாத்துங்க.. நடிகையிடம் சண்டை போட்ட சேரன்.. பிடிவாதம் பிடித்த நடிகை..

இந்தக் காட்சிக்கான டப்பிங் பணியின் போது பல முறை இந்த வசனத்தை உச்சரித்த போது லிங்குசாமிக்கு திருப்தியில்லை. ஏனெனில் தாங்க மாட்டீங்கடா என்று தழுதழுத்த குரலாக வர வேண்டும் என பிடிவாதமாக இருந்தார் லிங்குசாமி. மம்முட்டியும் பல கோணங்களில் பேச எதுவுமே லிங்குசாமிக்கு திருப்தி அளிக்கவில்லை. இதனால் கோபமடைந்த மம்முட்டி டைக்ரக்டைரை வெளில உட்காரச் சொல்லுங்க.. அங்கிருந்து கேட்கட்டும் என்று கூறி டப்பிங் பேசியிருக்கிறார். அதையும் அரை மனதுடன் ஓகே சொல்லியிருக்கிறார் லிங்குசாமி. படம் வெளியாகி மலையாளத்திலும், தமிழிலும் சூப்பர்ஹிட் படமாக ஓடியது.

படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் லிங்குசாமி மம்முட்டிக்கு மோதிரம் பரிசளிக்க கேரளா சென்றிருக்கிறார். அங்கு குமுதம் இதழில் ஆனந்தம் படத்தின் விமர்சனத்தில் மம்முட்டியின் டப்பிங் பற்றி சிலாகித்து எழுதியிருந்ததைக் காட்டி லிங்குசாமி மம்முட்டியிடம் பேசியிருக்கிறார். இப்படி இயக்குர் திருப்தி ஆகும் வகையில் சீனியர் நடிகர் என்ற ஈகோ இல்லாமல் பலமுறை இயக்குநர் ஓகே சொல்லும் வரை அந்த வசனத்தைப் பேசி படத்தின் வெற்றிக்கு முக்கியத் தூணாக இருந்திருக்கிறார் மெகா ஸ்டார் மம்முட்டி.