இப்படி ஒரு வாய்ஸ் இனிமே யாருமே பாடி கேட்கக் கூடாது… விஷாலை பங்கமாய்க் கலாய்த்த சுந்தர் சி., விஜய் ஆண்டனி..

12 வருட காத்திருப்புக்குப் பின் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தானம் காமெடியனாக உச்சத்தில் இருந்த நேரம், விஜய் ஆண்டனியின் அதிரடி இசை, வரலட்சுமி, அஞ்சலி…

Vishal

12 வருட காத்திருப்புக்குப் பின் விஷால் நடித்த மதகஜராஜா திரைப்படம் வருகிற பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தானம் காமெடியனாக உச்சத்தில் இருந்த நேரம், விஜய் ஆண்டனியின் அதிரடி இசை, வரலட்சுமி, அஞ்சலி கிளாமர், சுந்தர் சி-யின் ஹியூமர் இயக்கம் என பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவான திரைப்படம் தான் மதகஜராஜா.

ஆனால் படத்தின் மீதான பைனான்ஸ் பிரச்சனையால் படம் பெட்டிக்குள் முடங்கியது. இப்போ வரும், அப்போ வரும் என்று விஷால் ரசிகர்களுக்கு கண்ணா மூச்சி காட்டிக் கொண்டிருந்த மதகஜராஜா ஒருவழியாக இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது. மேலும் டிரைலரும் ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. இந்தப் படத்தில் தான் முதன் முதலாக பாடல் பதிவினை தனியாக ஷுட் செய்து வெளியிட்டனர். அந்தப் பாடல்தான் விஷால் பாடிய மைடியர் லவ்வரு… பாடல்.

அஜீத் ஏன் நான் கடவுள் படத்துல நடிக்கல தெரியுமா? சீக்ரெட் உடைத்த இயக்குநர் பாலா

இந்தப் பாடல் பதிவின் போது இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மற்றும் சுந்தர் சி யாரைப் பாட வைக்கலாம் என யோசித்துக் கொண்டிருந்தார்களாம். இந்தப் பாடலைக் கேட்டால் அனைவருக்கும் பிடிக்காமல் போக வேண்டும். இப்படி குரலா என கலாய்க்க வேண்டும். கர்நாடக சங்கீதம் பயின்றவர்கள் கோபப்பட வேண்டும்.

கொடுமையான குரலாக இருக்க வேண்டும் என்றவாறு யோசித்துக் கொண்டிருக்க சட்டென விஷால் ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்குள் செல்ல இருவர் முகத்திலும் பிரகாசம். இந்தப் பாடலை விஷாலையே பாட வைக்கலாம் என முடிவெடுத்து பாட வைத்திருக்கின்றனர். இதில் முக்கியமானது என்னவென்றால் சிங்கிள் டேக்கிலேயே பாட வேண்டும். இன்னொரு டேக் எடுத்தால் நன்றாகப் பாடி விடுவார் எனவே ஒரே டேக்கில் பாடலை பதிவு செய்திருக்கிறார்கள்.

இப்படித்தான் மை டியர் லவ்வரு.. பாடல் உருவானதாக மதகஜராஜா படத்தின் புரோமோஷன் விழாவில் விஜய் ஆண்டனியும், சுந்தர் சி.யும் தெரிவித்தனர்.