மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு போன்ற பாடல்களால் ரசிகர்கள் உற்சாகத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர். இப்படத்தில் நடிகரும் இயக்குனர் நடிகர் பாக்யராஜின் மகனுமான சாந்தனுவும் நடித்துள்ளார். விஜயின் வெறித்தனமான ரசிகனான சாந்தனு ஏற்கனவே இப்படத்தின் பாடல்களுக்கு டான்ஸ் ஆடி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இப்போது விழா மேடையில் இசையமைப்பாளர் அனிருத் மற்றும் சாந்தனுவுடன் விஜய் லேசான குத்தாட்டம் ஆடியுள்ளனர் வாத்தி கம்மிங் பாடலுக்குத்தான் இவ்வாறு குத்தாட்டம் போட்டுள்ளனர்.இதை கனவு நினைவாகியது என சாந்தனு கூறியுள்ளார்.