நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் மாஸ்டர் படமாகும். இந்தப் படத்தில் மாளவிகா மோகனன் விஜய் சேதுபதி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்தப் படமானது ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்தநிலையில் கொரோனா தொற்றின் தீவிரம் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் இந்தத் திரைப்படமானது திட்டமிட்டபடி வெளியாகவில்லை.
விஜய் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி இந்தத் திரைப்படம் வெளியாகலாம் என்றும் தகவல்கள் வெளியாகின. இப்படம் எப்போது ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும்நிலையில், இப்படம் குறித்த ஒரு செமயான அப்டேட் கிடைத்துள்ளது.
அதாவது விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி மாஸ்டர் படத்தின் ட்ரைலரை படக் குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகின்றது
சமீபத்தில் மாஸ்டர் பட்த்தின் ட்ரைலர் குறித்து அப்படத்தின் நடிகை மாளவிகா மோகனன் செம மாஸ், பார்த்தாலே புல்லரிச்சிடும் என்று கூற விஜய் ரசிகர்களோ எதிர்பார்ப்பின் உச்சகட்டத்திற்கு சென்று விட்டனர். இந்தநிலையில் ஜூன் 22 ஆம் தேதி ட்ரைலர் வெளியாகவுள்ளதாகத் தகவல் வர சமூக வலைதளங்களில் பெரிய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.