அடேயப்பா மகேந்திரன் நடிக்க வந்து 25 வருசமாச்சா

கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்த நாட்டாமை படத்தில் அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தின் திருப்பு முனையான ஒரு ப்ளாஷ்பேக் பஞ்சாயத்து காட்சியில் மகேந்திரன் சொல்லுவதை வைத்துதான் தீர்ப்பு சொல்லி அது படத்தின் திருப்பு முனை…

கடந்த 1994ம் ஆண்டு வெளிவந்த நாட்டாமை படத்தில் அறிமுகமானவர் மாஸ்டர் மகேந்திரன். இப்படத்தின் திருப்பு முனையான ஒரு ப்ளாஷ்பேக் பஞ்சாயத்து காட்சியில் மகேந்திரன் சொல்லுவதை வைத்துதான் தீர்ப்பு சொல்லி அது படத்தின் திருப்பு முனை காட்சியாக அமையும். இதில் சின்னப்பையன் ஆக மகேந்திரன் நடித்து இருந்தார்.

f93501cb2dee1157049433d6d4240b13

அதற்கு பிறகு பாண்டியராஜன் நடித்த தாய்க்குலமே தாய்க்குலமே படத்தில் படத்தில் நேபாள கூர்க்கா செய்கைகளோடு குறும்புத்தனமாக வயதுக்கு மீறிய குறும்புத்தன பேச்சுக்களால் அனைவரையும் கவர்ந்தார் மகேந்திரன்.

பின்பு பாண்டியராஜன் நடித்து கேயார் இயக்கிய கும்பகோணம் கோபாலு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் குறும்புத்தன சிறுவனாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

இப்படி பல பல படங்களில் முக்கிய கதாநாயகர்களின் சிறுவயது கதாபாத்திரத்திலும் நடித்த மகேந்திரன் பெரியவன் ஆனதும் விழா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடிக்க துவங்கினார்.

இப்படி பல படங்களில் பார்த்த மகேந்திரன் நடிக்க வந்து 25 வருடங்கள் ஆகி இந்த வருடம் வெள்ளிவிழா ஆண்டாம் இவருக்கு.

இதற்காக மக்கள் நீதிமய்யம் கட்சிக்காரர்கள் உட்பட பலரும் மகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன