தளபதி விஜய் நடித்து வரும் ’மாஸ்டர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு 60% மட்டுமே முடிவடைந்துள்ள நிலையில் இந்த படம் ரூபாய் 200 கோடிக்கு விற்பனை ஆகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது
விஜய் நடித்துவரும் ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டது. தமிழக ரிலீஸ் உரிமையை தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜெகதீஷ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநில உரிமைகளும் வெளிநாட்டு உரிமைகளும் விற்பனையாகி விட்டது. மேலும் இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவியும், டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பெரிய தொகையைக் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’மாஸ்டர்’ படத்தின் மொத்த வியாபாரம் ரூபாய் 200 கோடிக்கு விற்பனையாகி இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்பதும் யூகத்தின் அடிப்படையிலேயே சமூக வலைதளங்களிலும் இந்த தகவல் பரவி வருவதாகவும் கூறப்படுகிறது
விஜய்யின் முந்தைய படங்களும் இதேபோல் ரிலீஸுக்கு முன்னரே விற்பனையாகின என்பதும் பின்னர் அந்த படங்கள் ரிலீஸுக்கு பின்னர் போதுமான வசூலை பெறவில்லை என்பதால் நஷ்டமாகியதாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது