நடிகர் விஜய் சேதுபதி சினிமாவில் உதவும் குணம் கொண்டவர். நல்ல மனிதர் என பெயர் பெற்றவர் ஆனால் அடிக்கடி கடவுள் பற்றிய பேச்சுக்கள் சர்ச்சைகளில் சிக்கி விடுவார். கடவுள் மறுப்பு கொள்கைகளில் தீவிர நம்பிக்கையுடைய விஜய் சேதுபதி நேற்றும் மாஸ்டர் ஆடியோ விழாவில் இது போல பேசினார்.
அவர் பேசியதாவது, ஒரு வைரஸ் இருக்கு அது என்னனா சாமிக்காக சண்டை போட்டுக்குறாங்க அது ஏன்னு எனக்கு தெரியல. நாம எல்லாரும் ஒண்ணு புரிஞ்சுக்கணும் சாமி பல கோடி வருசமா இங்க இருக்குது, ஆனா சாமி இன்னும் சாமிய காப்பாத்துற மகா மனுஷன படைக்கவே இல்ல சாமிய காப்பாத்துறேன்னு சொல்ற எந்த மனுஷனையும் நம்பாதிங்க. சாமியை எந்த ஒரு சாதாரண மனுஷனலாயும் காப்பாத்த முடியாது. இது எல்லாம் ஃபுருடா. யாராவது ஏதாவது பேசினா என்னோட மதத்துல என்ன சொல்லுது சொல்லாதிங்க அதுக்கு பதிலா மனிதத்தையும் மனித நேயத்தையும் சொல்லி கொடுங்க என விஜய் சேதுபதி பேசியுள்ளார்.