இது துருவோட வெற்றி.. அவன் போட்ட உழைப்பு.. ஃபீல் பண்ணி பேசிய மாரி செல்வராஜ்!

சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி அதன்பின் பல படங்களிலும் நடித்து ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் சியான் விக்ரம். இவரின் மகன் துருவ் இப்போது சினிமாவுக்கு…

dhruvv

சேது திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க தொடங்கி அதன்பின் பல படங்களிலும் நடித்து ஹிட் படங்கள் கொடுத்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்தான் சியான் விக்ரம். இவரின் மகன் துருவ் இப்போது சினிமாவுக்கு நடிக்க வந்துவிட்டார். அப்பாவைப் போலவே கடுமையாக உழைக்க வேண்டும் என்கிற எண்ணம் துருவுக்கு நிறையவே இருக்கிறது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான பைசன் படத்தில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு இது புரிந்திருக்கிறது. இந்த படத்திற்காக இரண்டு வருடங்களுக்கு மேல் கபடி பயிற்சி, உடற்பயிற்சி என கடுமையான பயிற்சிகள் செய்து தன்னை தயாராகிக் கொண்டிருக்கிறார் துருவ். ஒவ்வொரு உழைப்பும் பிரேமில் தெரிகிறது.

மாரி செல்வராஜ் இதற்கு முன்பு நான்கு வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் துருவுக்கு இதுதான் முதல் வெற்றி. ஏனெனில் ஏற்கனவே வர்மா, ஆதித்ய வர்மா, மகான் ஆகிய மூன்று படங்களில் நடித்தார். ஆனால், பல சிக்கல்களால் அந்த படங்கள் ரசிகர்களை சென்று சேரவில்லை. எனவேதான் ‘பைசன் எனது முதல் படம்’ என ஒரு மேடையில் பீலிங்கோடு பேசியிருந்தார் துருவ்.

சமீபத்தில் வெளியான பைசன் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்று வருகிறது. எனவே படக்குழு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இந்த படத்தில் துருவின் நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த படத்தில் பசுபதி, அமீர், லால் ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.

ஒருபக்கம் படத்தை புரமோட் பண்ணும் விதமாக மாரி செல்வராஜ், பசுபதி, அனுபமா, துருவ் உள்ளிட்ட படக்குழு பல ஊர்களுக்கும் சென்று பைசன் ஓடும் தியேட்டர்களில் ரசிகர்களிடம் பேசி வருகிறார்கள். இந்நிலையில் ஒரு தியேட்டரில் ரசிகர்கள் முன்பு பேசிய மாரி செல்வராஜ் ‘பைசன் முழுக்க முழுக்க துருவுக்கு கிடைத்த வெற்றி. ஏனெனில் அவனுடைய உழைப்பு இல்லாமல் இந்த படத்தை என்னால் எடுத்திருக்கவே முடியாது.

இந்த படத்தை எடுக்கும் போது ‘இந்த படம் முடியும்போது எனக்கு ஏதாவது ஆகும் அல்லது உனக்கு ஏதாவது ஆகும்.. இதையெல்லாம் மீறிதான் படத்தை எடுக்க வேண்டும்’ என்று துருவிடம் சொன்னேன். துருவ் என்னை நம்பினான். இது துருவின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி’ என்று பீலிங்கோடு பேசியிருக்கிறார்.