தமிழ் சினிமாவில் மக்களின் வலியை திரையில் பிரதிபலிப்பதில் குறைந்த இயக்குனர்களை உள்ளனர். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு இடத்தை குறுகிய காலத்திலேயே பிடித்து விட்டவர் தான் மாரி செல்வராஜ். கதிர், ஆனந்தி ஆகியோர் நடித்த பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்திருந்தார் மாரி செல்வராஜ். இந்த திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியாவைத் தாண்டி சர்வதேச அரங்கிலும் அதிக கவனம் பெற்று இருந்தது.
மக்களின் வலியை பிரதிபலிக்கும் மாரி..
சில சமுதாயத்தினரின் வலியை எந்தவித குறையும் வைக்காமல் அப்படியே பரியேறும் பெருமாள் படத்தில் பிரதிபலித்திருந்ததால் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஒரு தாக்கத்தை மாரி செல்வராஜ் ஏற்படுத்தி இருந்தார். முதல் படத்தின் வெற்றியின் காரணமாக இரண்டாவது திரைப்படத்திலேயே தனுஷை இயக்கும் வாய்ப்பும் மாரி செல்வராஜுக்கு கிடைத்திருந்தது. தனுஷ் – மாரி காம்போவில் உருவான கர்ணன் திரைப்படமும் மிகப்பெரிய வெளிய அளவில் வெற்றி அடைந்திருந்தது.
தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் மற்றும் வடிவேலு ஆகியோரை வைத்து மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்த மாரி செல்வராஜ் சமீபத்தில் வாழை என்ற திரைப்படத்தையும் இயக்கி முடித்திருந்தார். இவர் இயக்கும் திரைப்படங்களில் அதிகம் உண்மைச் சம்பவங்கள் அடிப்படையாக கட்டமைக்கப்பட்டிருக்கும் என்ற நிலையில் வாழை திரைப்படமும் அந்த வகையில் அமைந்திருந்ததுடன் சர்வதேச அரங்கிலும் நிறைய விருதுகளை வென்று அசத்தியிருந்தது.
விமர்சனத்தை கண்டுகொள்ளாத மாரி..
அதிகம் பிரபலம் இல்லாத நடிகர்கள் பலரும் வாழை திரைப்படம் முழுக்க நிறைந்திருக்க, அடுத்ததாக துருவ் விக்ரமை வைத்து ‘பைசன்’ என்ற திரைப்படத்தையும் மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். மாரி செல்வராஜ் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினரை பற்றி மட்டுமே எப்போதும் திரைப்படம் எடுப்பதாக விமர்சனங்கள் அதிகமாக இருந்தாலும் எளிய மக்களின் வலியை தொடர்ந்து திரையில் சொல்லிக் கொண்டே இருப்பேன் என்பதிலும் அவர் உறுதியாக இருந்து வருகிறார்.
நட்டியை வெயிலில் உட்கார வைத்த மாரி
அப்படி ஒரு சூழலில் அவரது இயக்கத்தில் உருவான கர்ணன் திரைப்படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் நடிகர் நட்ராஜ் நடித்த போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி அவரே ஒரு நேர்காணலில் சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். “முதல் நாளில் நான் கர்ணன் படத்திற்காக சென்றதும் மாரி செல்வராஜ் தூரத்தில் ஒரு பாறையை காண்பித்து அதில் சென்று உட்கார முடியுமா என்று கேட்டார்.
அங்கே ஒரு நாற்காலியை போட்டு என்னை அமர வைத்ததுடன் தண்ணீர், புத்தகங்கள், செய்தித்தாள்கள் என அனைத்தையும் கொடுத்தார். அப்போது எனது அசிஸ்டன்ட் குடைப்பிடிக்க அது வேண்டாம் எனக்கூறிய மாரி செல்வராஜ், வெயிலை முழுக்க உடம்பில் வாங்கி கொள்ளும்படி கூறினார். காலை 10 மணி முதல் மாலை 4:30 மணி வரையில் அந்த வெயிலில் தான் இருந்தேன்.
ஒரு காட்சி கூட ஷூட்டிங் எடுக்கப்படவில்லை. ஆனால், திகட்டும் அளவுக்கு உணவு, இளநீர் என அனைத்தும் வந்து கொண்டே இருந்தது. மேலும் ஷூட்டிங்கிற்கு முன்பாக எனது கெட்டப் எதையும் மாற்ற வேண்டாம் என மாரி செல்வராஜ் கூறிவிட்டார். இதன் பின்னர் அவர் சொன்ன கெட்டப்பில் நான் ஷூட்டிங் ஸ்பாட் போய் நின்றதும் நான் எதோ உள்ளூர் போலீஸ் வந்திருப்பதாக நினைத்து விட்டனர். என்னை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை. அந்த அளவுக்கு எனது கெட்டப்பை மாரி செல்வராஜ் மாற்றவிட்டார்” என நட்ராஜ் கூறி உள்ளார்.