நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம். நடிகர் விக்ரம் சினிமாவுக்கு வந்து பல வருடங்கள் கழித்து போராடிதான் சினிமாவுக்கு வந்தார். ஆனால் துருவ் விக்ரமுக்கு அப்படியல்ல , வர்மா பட பூஜை போட்ட உடனேயே இவர் எப்படி நடிப்பார் இவரின் நடிப்பை பார்க்க வேண்டுமே என ரசிகர்கள் பலருக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
பாலா இயக்கிய வர்மா சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் போக மீண்டும் ஆதித்யா வர்மா என்ற அதே கதையில் வேறு இயக்குனரின் படத்தில் நடித்தார்.
முதல் படத்திலேயே தேர்ந்த நடிகர் போல இவர் நடித்திருந்தார் துருவ். இப்போது அடுத்ததாக கர்ணன் படத்தை இயக்கி வரும் மாரி செல்வராஜ் அடுத்ததாக இயக்கும் படத்தில் துருவ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.