மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தாமிரபரணியில் கொல்லப்படாதவர்கள் என்ற சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் மற்றும் ஆனந்த விகடனில் மறக்க நினைக்கிறேன் என்ற தொடரையும் எழுதி இருக்கிறார், ஆரம்பத்தில் பத்திரிக்கையாளராக சில காலம் பணிபுரிந்த பின்பு இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக சேர்ந்தார்.
இயக்குனர் ராம் அவர்களிடம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாக உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் மாரி செல்வராஜ். பின்னர் 2018 ஆம் ஆண்டு பரியேறும் பெருமாள் என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுத் தந்தது.
பரியேறும் பெருமாள் திரைப்படம் ஒரு நல்ல ஆழமான கருத்தை கொண்டிருந்ததோடு பார்வையாளர்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றார் மாரி செல்வராஜ். அடுத்ததாக தனுசுடன் இணைந்து 2021 ஆம் ஆண்டு கர்ணன் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படமும் வெற்றி திரைப்படம் ஆனது.
தொடர்ந்து மாமன்னன், வாழை ஆகிய திரைப்படங்களை இயக்கினார். இந்த வருடம் இவர் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் அனைவரின் பாராட்டுகளையும் மக்களின் பொதுவாக நல்ல விமர்சனங்களையும் பெற்று இந்த வருடத்தின் சிறந்த படம் என அனைவரும் சொல்லும் அளவிற்கு இருந்தது. இந்த திரைப்படம் இவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது என்று சொல்லலாம். இந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்தடுத்து மாரி செல்வராஜ்க்கு பெரிய பட்ஜெட் பட வாய்ப்புகள் குவிந்துள்ளது. அதைப்பற்றி ஒரு நேர்காணலில் அவரே கூறி இருக்கிறார்.
மாரி செல்வராஜ் கூறியது என்னவென்றால் தற்போது நான் துருவ் விக்ரமை வைத்து இயக்கி கொண்டிருக்கும் பைசன் திரைப்படத்தின் சூட்டிங் 75 சதவீதம் முடிந்து விட்டது. இந்த படத்தை முடித்துவிட்டு அதற்கு அடுத்ததாக தனுசுடன் இணைந்து ஒரு வரலாற்று சிறப்புமிக்க கதையை இயக்க இருக்கின்றேன். அதற்கு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் இணைந்து படம் பண்ணுவதற்கு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்று ஓபனாக பேசியிருக்கிறார் மாரி செல்வராஜ்.