தமிழ் சினிமாவில் நடிகர் இயக்குனருமானவர் மனோபாலா. இவர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக இருந்து தமிழ் சினிமாவில் இயக்குனராக உயர்ந்து பிள்ளை நிலா, ஊர்க்காவலன், என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான், கருப்பு வெள்ளை, மல்லுவேட்டி மைனர், மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும் உள்ளிட்ட படங்களை இயக்கியவர்.
நட்புக்காக தொடங்கி பல படங்களில் காமெடி நடிகராகவும் நடித்து விட்டார் இவர்.
இவரின் பிறந்த நாள் நேற்று முன் தினம் ஆகும். இதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள மனோபாலா சார் அவர்களின் 80வது பிறந்த நாளுக்கு வாழ்த்து என்று ஜாலியாக கலாய்த்துள்ளார். அவருக்கு வயதோ 67 என்பது குறிப்பிடத்தக்கது.