கிராமப் புற மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கிய பின்னணி பாடகர் மனோ!!

சீனாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் ஆட்டிப் படைத்து வருகின்றது. இத்தாலி, அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளை உலுக்கி வருகின்றது.…

சீனாவில் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உருவான கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளையும் ஆட்டிப் படைத்து வருகின்றது. இத்தாலி, அமெரிக்கா, சீனா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளை உலுக்கி வருகின்றது.

கொரோனா ஒருபுறம் உலுக்குவதைப் போல, ஊரடங்கால் மக்கள் உணவுத் தட்டுப்பாட்டால் மற்றொரு புறம் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாட கூலி வேலைக்குச் செல்லும் மக்களின் அடுத்த வேளை சோறு என்பது நிச்சயமற்று உள்ள நிலையில் பலரும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்து வருகின்றனர்.

e30ec71c3e5511d073488349e7263dba-1

அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டம் எருக்குவாய் கண்டிகை என்ற கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கியுள்ளார் சினிமா பின்னணி பாடகர் மனோ.

மேலும் கொரோனா குறித்த விழிப்புணர்வினை ஏற்படுத்த நினைத்த அவர் பாட்டுப் பாடி, அதன்மூலம் கொரோனாவின் தாக்கம், விளைவுகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என அனைத்தையும் எடுத்துக் கூறினார்.

அதன்பின்னர் கிராம மக்களுக்கு அரிசி, மளிகைப் பொருட்கள் என ஒரு மாதத்திற்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டது, இதனைத் துவக்கிவைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன