அசுரன் பட நாயகிக்கு திடீர் விபத்து: தனுஷ் நலம் விசாரித்தார்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து இருந்தவர் மஞ்சுவாரியார். இவர் மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தாலும் தமிழில் இவர் நடித்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது…


3c547ccb29989483f53dc95786fa5f00

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த அசுரன் திரைப்படத்தில் நாயகியாக நடித்து இருந்தவர் மஞ்சுவாரியார். இவர் மலையாளத்தில் பிரபல நடிகையாக இருந்தாலும் தமிழில் இவர் நடித்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ஒரு மலையாள படமொன்றில் படப்பிடிப்பின் போது இவருக்கு திடீரென விபத்து ஏற்பட்டது. ஒரு சண்டைக் காட்சியை படமாக்கியபோது மஞ்சுவாரியர் கீழே விழுந்ததாகவும் இதனால் அவர் கால் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது

7dee88cc5441f2a3391b2ed478a58b8b

இதனையடுத்து மஞ்சுவாரியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு பத்து நாட்கள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதால் அதுவரை படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

மஞ்சு வாரியருக்கு காயம் ஏற்பட்டால் தகவல் தெரிந்ததும் தனுஷ் அவரிடம் போனில் நலம் விசாரித்ததாக கூறப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன