இந்த படத்துக்கு அது போதும்.. துணிவு படத்தை கலாய்த்தாரா ஹெச். வினோத்?.. நடிகை மஞ்சு வாரியர் சொன்னது என்ன?..

தமிழ் சினிமாவில் தனது முதல் திரைப்படமான சதுரங்க வேட்டை மூலம் மிகப்பெரிய ஒரு இயக்குனராக உருவெடுத்தவர் தான் ஹெச். வினோத். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் இருந்த நட்ராஜை மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில்…

manju warrier about h. vinoth and thunivu

தமிழ் சினிமாவில் தனது முதல் திரைப்படமான சதுரங்க வேட்டை மூலம் மிகப்பெரிய ஒரு இயக்குனராக உருவெடுத்தவர் தான் ஹெச். வினோத். இந்த படத்தில் ஒளிப்பதிவாளராகவும், நடிகராகவும் இருந்த நட்ராஜை மிக வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்திருந்தார்.

முதல் படத்தின் வெற்றியுடன் விடாமல் இரண்டாவது திரைப்படத்தில் கார்த்தியை இயக்கிய ஹெச். வினோத், தீரன் அதிகாரம் ஒன்று என்ற தமிழ் சினிமாவின் மிக முக்கியமான ஒரு போலீஸ் ஸ்டோரியை உருவாக்கி இருந்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் ஹெச். வினோத் உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு நிறைய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அதனை திரைக்கதையாக அமைத்து வெற்றி கண்டிருந்தார்.

இரண்டே திரைப்படங்களில் யாருப்பா இது என அனைவரையுமே தேட வைத்து இயக்குனராக இருந்த ஹெச். வினோத்திற்கு அடுத்த மூன்று படங்களில் தொடர்ந்து நடிகர் அஜித்குமாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. இதில் முதலாவது திரைப்படமாக ஹிந்தியில் பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்திருந்த பிங்க் என்ற படத்தை தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்.

இந்த படம் நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றிருந்த நிலையில் அடுத்ததாக வலிமை மற்றும் துணிவு என இரண்டு திரைப்படங்களை நடிகர் அஜித்குமாரை வைத்து ஹெச். வினோத் இயக்கியிருந்தார். அஜித்ஹெச். வினோத் காம்போவில் வெளியான 3 திரைப்படங்களும் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தது.

அடுத்ததாக விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு முன்பாக அவர் நடிக்கும் கடைசி திரைப்படமான தளபதி 69 படத்தை ஹெச். வினோத் இயக்க உள்ளார். அக்டோபர் மாதம் விஜய்யின் கடைசி திரைப்படமா தளபதி 69 படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில் துணிவு படத்தின் படப்பிடிப்பும் போது நடந்த சம்பவம் ஒன்றை அதில் நடித்த நடிகை மஞ்சு வாரியர் தெரிவித்த கருத்து தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

அசுரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்த மலையாள நடிகை மஞ்சு வாரியர் அடுத்ததாக அஜித் குமாரின் துணிவு திரைப்படத்திலும், தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் வேட்டைன் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இதில் துணிவு படத்தில் நடித்த போது நடந்த சம்பவம் பற்றி ஞ்சு வாரியார் பேசுகையில், “துணிவு படத்தில் நான் நடித்த போது எனக்கு அனைத்து சுதந்திரத்தையும் ஹெச். வினோத் சார் கொடுத்திருந்தார்.

நானே கொஞ்சம் சிறப்பாக நடித்து கொடுக்கிறேன் என கேட்டால் கூட, ‘இந்த படத்துக்கு இது போதும். Dont Worry’ என ரொம்ப காமெடியா ஹெச். வினோத் சொல்லி விடுவார். எனக்கு சில காட்சிகள் நன்றாக இல்லை என தோன்றும் போது அவரிடம் கேட்டால், ‘நீங்கள் நன்றாக நடிப்பதற்கு நான் வேறு ஒரு படத்தில் வாய்ப்பு தருகிறேன்’ என்று வேடிக்கையாக கூறுவார்.

ஒரு படத்தில் தில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது அவருக்கு தெரியும். துணிவு படத்தில் நான் பார்த்த வரைக்கும் அது தான் ஹெச். வினோத்துடைய ஸ்டைல்” என மஞ்சு வாரியார் கூறியுள்ளார்.