Manjari Elimination : பிக் பாஸ் நிகழ்ச்சி எந்த சீசனை எடுத்துக் கொண்டாலும் 80 முதல் 85 நாட்களை கடந்து விட்டால் அது மிகவும் ஒரு நெருக்கடியான கட்டமாக தான் உள்ளே இருக்கும் போட்டியாளர்களுக்கு அமையும். ஃபைனல் நெருங்கி வரும் வேளையில் கடைசி வரை தொடர்வதற்கு அந்த சமயம் மிக முக்கியமான காலகட்டம். அது மட்டுமில்லாமல், ஃபைனலுக்கு இவர் முன்னேறிவிடுவார் என பார்வையாளர்கள் நினைக்கும் போட்டியாளர்கள் கூட 80 நாட்கள் கடந்த சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளது.
அந்த வகையில், கடந்த இரண்டு வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து நான்கு பேர் வெளியேற அதில் சில போட்டியாளர்கள், பார்வையாளர்கள் மத்தியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். ஜெஃப்ரி மற்றும் அன்ஸிதா ஆகிய இருவரும் கடந்த வாரம் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்கள். இந்த இரண்டு பேருமே யார் தவறு செய்தாலும் துணிச்சலுடன் அதை தட்டிக் கேட்பவர்கள்.
கண்ணீருடன் கேட்ட விஷயம்
சிறந்த போட்டியாளர்களாக இருந்தும் வெளியேற, இந்த வாரமும் பலம் வாய்ந்த போட்டியாளரான மஞ்சரி வெளியேறி உள்ளார். ஃபைனலில் இருப்பதற்கு தகுதியான ஆள் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வந்த மஞ்சரியின் எலிமினேஷன், ரசிகர்கள் பலரையும் எமோஷனலாக உணர வைத்திருந்தது. அவருடன் எப்போதும் இருக்கும் ஜாக்குலின், மஞ்சரி எலிமினேஷனால் மனமுடைந்து தான் போயிருந்தார். இதே போல முத்துகுமரனும் பேச வார்த்தைகள் இல்லாமல் அறிவுரைகளை மட்டும் மஞ்சரிக்கு கூறி அனுப்பி வைத்திருந்தார்.
மஞ்சரி ஆரம்பத்தில் எமோஷனல் ஆகவில்லை என்றாலும் வெளியேறுவதற்கு முன்பாக கொஞ்சம் மனமுடைந்து விட்டார். அந்த சமயத்தில், அவர் கண்ணீருடன் ஒரு விஷயத்தை கேட்க, அதற்கு பிக் பாஸ் மறுத்த சம்பவம் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம். மஞ்சரியின் மகன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்திருந்த போது மிகவும் எமோஷனலான தருணமாக மாறி இருந்தது.
மஞ்சரியால பிக் பாஸுக்கு பெருமை
அவருக்காகவே ஃபைனல் முன்னேற வேண்டுமென நினைத்த மஞ்சரி வெளியேறிய சமயத்தில் பிக் பாஸிடம், அனைவரும் உடைத்து விட்டு வெளியேறும் டிராபியை மகனுக்காக உடைக்காமல் இதுவே பிக் பாஸ் வென்ற கோப்பையை போல எடுத்து செல்லவா என கேட்டார். தாங்கள் பெற்ற கோப்பையை வெளியேறும் போது உடைத்து விட்டு செல்ல வேண்டும் என்பது தான் பிக் பாஸ் விதி.
“மஞ்சரி, நான் சொன்ன எல்லாத்தையும் நீங்க கேட்டுருக்கீங்க. இது அதோட கடைசி” என கோப்பையை உடைக்கவும் கூறி விட்டார். தொடர்ந்து பேசிய பிக் பாஸ், “உடைய போவது இந்த டிராபியின் வடிவம் தான். நீங்கள் அல்ல. கடினமான போட்டி மனப்பான்மையோடு, மன உறுதியோடு வலம் வந்த கடினமான போட்டியாளர்களில் நீங்களும் ஒருவர் என சொல்வதில் எனக்கு பெருமை” என பிக் பாஸ் கூறினார்.