மஞ்சள் வீரனுக்கு இப்படி மாவு கட்டுப் போட்டுட்டாங்களே!.. டிராபிக் ரூல்ஸை மதிக்காமல் விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்!..

By Sarath

Published:

அதிவேகமாக பைக்கை ஓட்டி சாகசம் செய்து வந்த டி டி எஃப் வாசன் நேற்று நடந்த விபத்தில் தாறுமாறாக கீழே விழுந்த நிலையில் அவரது கை முறிந்து தற்போது கட்டுப்போட்டு உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்களை பதைபதைப்பில் ஆழ்த்தியுள்ளன.

Twin Throttles என் யூடியூப் சேனலை நடத்தி வரும் டி டி எஃப் வாசன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை ஓட்டி இளைஞர்கள் மத்தியில் தனக்கான ஒரு கிரேஸை பெற்றுள்ளார். அவரது யூடியூப் சேனலை பல இளைஞர்கள், 2கே கிட்ஸ் என லட்சக்கணக்கில் பின்தொடர்ந்து வருகின்றனர்.

மஞ்சள் வீரன் ஹீரோ:

அதைப் பயன்படுத்தி பிரபலமாக நினைத்த டி டி எஃப் வாசன் அடிக்கடி சாலை விதிகளை மீறுவதால் போலீசாரிடம் சிக்கி ஏகப்பட்ட வழக்குகளிலும் மாட்டி வருகிறார். அதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் போட்ட திட்டம் தான் சினிமா என்கின்றனர்.

மஞ்சள் வீரன் என்னும் படத்தில் டி டி எஃப் வாசன் ஹீரோவாக நடிக்கப் போவதாக ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எல்லாம் வெளியான நிலையில், அந்த படத்திற்கான சூட்டிங்கிலும் பங்கேற்று வருகிறார் டி டி எஃப் வாசன்.

சாலை விபத்தில் சிக்கிய டிடிஎஃப் வாசன்:

இந்நிலையில், நேற்று சென்னை டு பெங்களூர் ஹைவேயில் அதிவேகமாக தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது காஞ்சிபுரம் அருகே தாமல் ஊராட்சி எனும் இடத்தில் பைக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பல பல்டிகள் அடித்து விபத்திற்குள்ளானது.

மாவு கட்டு: 

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய டிடிஎஃப் வாசனுக்கு கையில் பயங்கர அடிபட்டு முறிவு ஏற்பட்ட நிலையில், கையில் கட்டுப்போடப்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், உடலில் பல இடங்களில் காயங்களும் ஏற்பட்டுள்ளன.

அதிவேகமாக வண்டியை ஓட்டிச் சென்று விபத்தில் வாசன் சிக்கிய நிலையில், பொதுமக்களுக்கு ஏதாவது உயிர் சேதம் ஏற்பட்டிருந்தால் அல்லது விபத்து நடந்து அடிபட்டு இருந்தால் என்ன ஆகும் இவரது அலப்பறைக்கு ஒரு அளவே இல்லையா. சாலை போக்குவரத்து விதிகளை மீறிய இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏகப்பட்ட புகார்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வரும் நிலையில், டி டி எஃப் வாசன் மீது பாலுசெட்டிசத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வழக்குப்பதிவு:

டி டி எஃப் வாசன் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது லைசென்ஸை பறிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டிடிஎஃப் வாசனுக்கு அடிபட்டுள்ள நிலையில், மஞ்சள் வீரன் படத்தின் ஷூட்டிங்கும் நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் இவர் பூரண குணமாகி வந்தால் படப்பிடிப்பு நடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பைக் ரேஸர் ஆக வேண்டும் என்றால் டிராக்கில் வண்டியை ஓட்டலாம் என்றும் அதிகாரப்பூர்வ ரேஸிங் போட்டிகளில் பங்கேற்பதை விட்டு விட்டு இப்படி உயிருக்கு ஆபத்தான சாகசங்களை செய்கிறேன் என்கிற பெயரில் அடுத்தவர்களையும் பயமுறுத்தி தன்னையும் துன்புறுத்திக் கொள்வது ஏன் என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.