சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையினைத் துவக்கிய மணிமேகலை 90ஸ் கிட்ஸ்கள் மத்தியில் ரொம்பவும் பிரபலம். தனது பேச்சுத் திறமையால் சன் தொலைக்காட்சியில் இருந்து விஜய் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கும் வாய்ப்பினைப் பெற்றார்.
கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸ்ஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் இவர் இன்னும் கூடுதலான ரசிகர்களையே பெற்றார்.
குக்கு வித் கோமாளியில் இவர் செய்யும் குறும்புகளுக்கு குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் அடிமைகள் என்றே சொல்லலாம். இவர் 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதிக்காததால் காதர் ஹுசைன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காதரின் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்ற அவர் அங்குள்ள கிராமத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இதனால் அந்த கிராமத்திலேயே இவர்கள் பொழுது போக்கி வருகின்றனர். இந்தநிலையில் தற்போது அவர், கிராமத்தில் உள்ள பெண்களுடன் கண்டாங்கி சேலை கட்டி ராம்ப் வாக் போகியுள்ளார். இந்த வீடியோவினை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும், ” கிராமத்தில் என்னுடைய கேர்ள்ஸ் அணி இவங்க தான். வில்லேஜ் குயில்ஸ். சென்னை வர ஆசை கொஞ்சம் கொஞ்சமா கம்மி ஆகுது” எனப் பதிவிட்டுள்ளார்.