சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையினைத் துவக்கிய மணிமேகலை கலக்கப்போவது யாரு?, குக்கு வித் கோமாளி, மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரை போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்றதன் மூலம் இவர் இன்னும் கூடுதலான ரசிகர்களையே பெற்றார்.
குக்கு வித் கோமாளியில் இவர் செய்யும் குறும்புகளுக்கு குழந்தைகள் முதல் இல்லத்தரசிகள் வரை அனைவரும் அடிமைகள் என்றே சொல்லலாம். கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும்பொருட்டு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், காதரின் உறவினர் ஒருவர் வீட்டிற்குச் சென்ற அவர் அங்குள்ள கிராமத்தில் மாட்டிக் கொண்டுள்ளார்.
இதனால் அந்த கிராமத்திலேயே இவர்கள் பொழுது போக்கி வருகின்றனர். தற்போது அங்கேயே ஆல் வேர்ல்ட் முறுக்கு பிரைவேட் லிமிடெட் கம்பெனி என்ற கம்பெனியை ஆரம்பித்துள்ளார். அந்தக் கம்பெனியினை உருவாக்கியதில் இருந்து, தற்போது முறுக்கு சுட்டு விற்பனை செய்வதுவரை அனைத்தையும் வீடியோவாகப் பதிவிட்டு உள்ளார்.
முறுக்கு அடுப்பு மண்ணால் உருவாக்கும்போது இருந்து, முறுக்கு கம்பெனியின் திறப்பு விழாவரை படையப்பா படத்தின் மியூசிக் பின்னணியில் ஒளிபரப்பாக அவர் பரபரப்பாக வேலை பார்ப்பதுபோல் வீடியோவினைப் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவினைப் பார்த்த ரசிகர்களோ, சென்னை திரும்பும் ஐடியா இல்ல போல, கிராமத்துலயே பிசினஸ் ஸ்டார்ட் பண்ணீட்டீங்க போல? என்று கேட்டு வருகின்றனர்.