குக் வித் கோமாளியை விட்டு விலகிய காரணத்தை கூறிய மணிமேகலை… விஜய் டிவியில் Nepotism- ஆ…?

தற்போது இணையத்தில் பேச்சு பொருளாகி பரவி வருவது மணிமேகலை பிரியங்கா இடையே ஆன மனக்கசப்பு தான். இதற்கு காரணம் மணிமேகலை குக் வித்து கோமாளி நிகழ்ச்சியிலிருந்து தான் வெளியேறியாதற்கான காரணத்தை தனது youtube சேனலில்…

manimegalai

தற்போது இணையத்தில் பேச்சு பொருளாகி பரவி வருவது மணிமேகலை பிரியங்கா இடையே ஆன மனக்கசப்பு தான். இதற்கு காரணம் மணிமேகலை குக் வித்து கோமாளி நிகழ்ச்சியிலிருந்து தான் வெளியேறியாதற்கான காரணத்தை தனது youtube சேனலில் காணொளியாக பதிவிட்டது தான் ன்று தீயாக இணையத்தில் பரவி வருகிறது. இதன் விளைவாக ட்விட்டரில் மணிமேகலை ஹேஷ் டேக் ட்ரெண்டிங் ஆகவும் இருக்கிறது.

மணிமேகலை பதிவிட்ட காணொளியில் கூறியிருக்கிறது என்னவென்றால், குக் வித் கோமாளி நிகழ்ச்சி நல்லா தான் போயிட்டு இருந்தது. என்ன தொகுப்பாளரா தேர்ந்தெடுத்தாங்க. நான் என்னோட வழியில் நான் நல்லா தான் பண்ணிக்கிட்டு இருந்தேன். அங்க கண்டஸ்டன்டா வந்த ஃபீமேல் ஆங்கர் என்னை ரொம்ப டாமினேட் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. நீ இப்படி தான் பண்ணனும் அப்படி தான் பண்ணனும் அப்படின்னு அவங்க என்ன வேலை செய்ய வந்தாங்களோ அதை பார்க்காம என்னை வேலை செய்ய விடாம பண்ணாங்க.

நாம செய்ய வந்த வேலைய கவனம் பண்ணாம என்ன குறை சொல்றது என்னோட வேலைய டாமினேட் பண்றது அப்படின்னு பண்ணிக்கிட்டே இருந்தாங்க. நானும் ரொம்ப எவ்வளவோ பொறுத்துதான் போனேன். ஒரு கட்டத்துக்கு மேல என்னோட தன்மானத்துக்கு பிரச்சனை அப்படிங்கிற நிலையில் தான் நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிட்டேன்.

அதற்குப் பிறகு என்கிட்ட ரொம்பவே காம்ப்பரமைஸ் பேசனாங்க. நீங்க பிரியங்கா கிட்ட மன்னிப்பு கேளுங்க. கேட்டுட்டு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்துங்க. அப்படி பண்ணுனா உங்களுக்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருக்கும். நிறைய ஷோ கிடைக்கும் அப்படியெல்லாம் பேசினாங்க. நான் அதை ஒத்துக்கவே இல்ல. என்கிட்ட திறமை இருக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்கும். குக் வித் கோமாளி முதல் சீசன்ல இருந்து நாலாவது சீசன் வரைக்கும் நான் வேலை செய்து இருக்கேன்.

இந்த நாலு சீசன்லயும் இருந்த ப்ரொடக்ஷன் ஹவுஸ் ரொம்ப ப்ரொபஷனலா நடந்துக்கிட்டாங்க. நிகழ்ச்சியை ரொம்ப நல்லா கொண்டு போனாங்க. இந்த அஞ்சாவது சீசன்ல இருக்கிற புரொடக்ஷன் ஹவுஸ் இப்படி அன் ப்ரொபஷனலா நடந்துக்கிட்டது எனக்கு மனதிற்கு ரொம்ப கஷ்டமா தான் இருக்குது. இருந்தாலும் பரவால்ல தன்மானத்தை மீறி நமக்கு கிடைக்கிற பணமும் பெயரும் புகழும் எனக்கு தேவையில்லை. என் திறமையினால நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தேன். இனியும் கஷ்டப்பட்டு நான் மேலே வந்திடுவேன். இந்த நாலு சீசன்ல நான் கோமாளியா இருந்தப்போ மக்கள் எனக்கு அவ்வளவு அன்பும் ஆதரவும் கொடுத்தாங்க. அதுவே எனக்கு போதும் மன நிறைவா இருக்கு என்று கூறி காணொளி பதிவிட்டு இருக்கிறார் மணிமேகலை. இதனால் பிரியங்காவை நெட்டிசன்கள் திட்டி தீர்த்து வருகின்றனர். விஜய் டிவியில் என்ன நெப்போல்டிஸமா நடக்கிறது என்றும் பேசி வருகின்றனர்.