பிக் பாஸ் 3 டைட்டில் வின்னராக மலேசியாவைச் சார்ந்த முகின் ராவ்!!

106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது. சிறிதுநேரம் வழக்கம்போல் விளையாடிய கமல் ஹாசன் இறுதியாக, முகென் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக…

106 நாட்களுடன் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியானது நேற்று இனிதே இதன் பிரமாண்ட விருது வழங்கும் விழாவினைக் கொண்டாடியது.

சிறிதுநேரம் வழக்கம்போல் விளையாடிய கமல் ஹாசன் இறுதியாக, முகென் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

fb0be062e29cac9a887f34984a766b36

இறுதிப் போட்டியில் மட்டும் முகெனுக்கு 7 கோடியே 64 லட்சம் வாக்குகளும், சாண்டிக்கு 5.83 கோடி வாக்குகளும் கிடைத்துள்ளதாக கூறினார்.

சேரன் ஓடிவந்து முதல் ஆளாக வாழ்த்துகள் கூற, அடுத்து தர்ஷன் முகினை அப்படியே தூக்கிவிட்டார். கமல் ஹாசனும் கட்டியணைத்து வாழ்த்துகள் கூறினார்.

அவரது குடும்ப உறுப்பினர்கள் கீழே ஒருவரை ஒருவர் கட்டியணைத்துக் கொண்டனர், அடுத்து அவர்கள் மேடையேறி வந்து பேசினர்.

அப்போது அவருடைய அம்மா மலேசியா மக்களுக்கும் தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவித்தார் முகென். கண்ணீர் சிந்தியவாறே பேசினார்.

இதன்மூலம் சாண்டி 2 வது பரிசினைப் பெற்றார். முகின் கையில் பிக் பாஸ் அவார்டும், சாண்டி கையில் லாலாவும் கொடுக்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன