தள்ளிப் போன முதல் படம்…மல்யுத்த வீரர் மலையாள சூப்பர் ஸ்டாராக மாறிய வரலாறு..மோகன் லால் திரைப்பயணம்

By John A

Published:

இன்று மலையாள சினிமா உலகின் சூப்பர் ஸ்டாராகத் திகழும் மோகன்லால் தேசிய அளவில் மல்யுத்த வீரராக விளங்கினார் என்றால் நம்ப முடிகிறதா? கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் 1960-ல் பிறந்தவர் தான் மோகன்லால். இவரது தந்தை கேரள அரசின் சட்டத்துறை செயலாளர்.

சிறு வயது முதலே மல்யுத்த விளையாட்டில் ஆர்வம் கொண்ட மோகன்லால் அதில் நன்கு பயிற்சி பெற்று தேசிய அளவிலான போட்டிகளிலும் பங்கு பெற ஆரம்பித்தார். ஒருமுறை இவரது நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மலையாளத்தில தீரனோட்டம் என்ற திரைப்படத்தை எடுத்தனர். 1978-ல் தயாரிக்கப்பட்ட இந்தப் படம் அப்போது வெளியாகவில்லை.

இதனையடுத்து இயக்குநர் பாசில் முதன் முதலாக இயக்குநராகக் களம் க ண்ட மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் என்ற திரைப்படத்திற்கான ஆடிஷனில் கலந்து கொண்டார். அன்றைய தினம் அவருக்கு தேசிய மல்யுத்தப் போட்டியும் இருந்தது. இருப்பினும் இந்த ஆடிஷனில் கலந்து கொண்டிருக்கறார். மென்மையான தன்மையான ஒரு மனைவி.

மனைவியை துன்புறுத்தும் கொடூர கணவன். வேலைக்கு வரும் இடத்தில் மணமுடித்தவள் என்று கூட தெரியாமல் அவளை விரும்பும் மற்றொருவன். இதுதான் இந்தப் படத்தின் கதை. இந்தப் படத்தில் காதலானக ஒருதலை ராகம் ஷங்கர் தேர்வு செய்யப்படுகிறார்.

‘நிலா அது வானத்து மேல..’ பாட்டுல திணற வைத்த அந்த ஒரு வார்த்தை.. இப்படித்தான் உருவாச்சா..?

ஆனால் கொடூர கணவன் கதாபாத்திரத்திற்கு இயக்குநர் பாசில் யாரைத் தேர்வு செய்யலாம் என தேர்வு வைக்கிறார். இந்த ஆடிஷனை நடத்தியவர்கள் இயக்குநர் பாசில், சிபிமலையில், மற்றும் மைடியர் குட்டிச்சாத்தான் படத்தை இயக்கிய ஜிஜோ ஆகியோர்.

இதில் இக்குநர் சிபிமலையில் இவருக்கு அளித்த மதிப்பெண்கள் நூற்றுக்குப் பத்து மட்டுமே. மற்ற இருவரும் 90 மதிப்பெண்கள் அளித்தனர். இதனையடுத்து இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்புக் கிடைக்க முதல் படத்திலேயே தனி முத்திரையைப் பதிக்கிறார் மோகன்லால்.

தொடர்ந்து பட வாய்ப்புகள் வருகிறது. வில்லன், இரண்டாம் கதாநாயகன் வேடங்களே அதிகம் கிடைத்தன. தவிர்க்காமல் நடித்து வந்த மோகன்லால் அதன்பின் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். தமிழில் எப்படி ரஜினி, கமல் காலகட்டங்கள் இருந்ததோ அதேபோல் மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் ஆகியோர் போட்டி நடிகர்களாக விளங்கினர். சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மோகன்லால் இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், பின்னனிப் பாடகராகவும் விளங்கி வருகிறார்.

பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்கள் மனித உணர்வுகளைக் கொண்டே விளங்குவதால் மோகன்லாலின் படங்கள் மலையாள தேசம் மட்டுமின்றி தமிழ், கன்னடம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் சக்கைப் போடு போட்டன. இந்திய அரசு இவரின் திரைச்சாதனைகளைப் பாராட்டி பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன் ஆகிய விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது.

தமிழில் இருவர், ஜில்லா, உன்னைப் போல் ஒருவன், காப்பான், புலி முருகன்,  சமீபத்தில் வெளியான ஜெயிலர் போன்ற படங்களில் மாஸ் வேடங்களில் நடித்திருப்பார் மோகன்லால்.