மலையாள இயக்குனர் கிரிஷ் ஏடி இயக்கத்தில் கடந்த மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் தான் பிரேமலு. அந்த படம் மலையாளத்தில் வெளியான போதே உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த படத்தை பார்த்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றினர்.
100 கோடி ரூபாய் வசூலை ஈட்டி அந்த படம் இந்த வாரம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியானது. ஹீரோவாக நஸ்லென் மற்றும் ஹீரோயினாக மமிதா பைஜு இந்த படத்தில் நடித்துள்ளனர்.
பிரேமலு விமர்சனம்:
இளைஞர்களின் இன்றைய லேட்டஸ்ட் க்ரஷ் ஆக மமிதா பைஜு மாறி இருக்கிறார். இந்த படம் முழுக்க அவரது அழகை அந்த அளவுக்கு ரசித்து ரசித்து ஒளிப்பதிவாளர் திரையில் காட்டிய நிலையில், ஹீரோ நஸ்லென் போலவே ரசிகர்களும் இது காதலில் விழுந்தது தான் இந்த படத்தின் வெற்றிக்கு காரணம்.
மஞ்சுமெல் பாய்ஸ் படத்தில் ஒரு ஹீரோயின் கூட இல்லையே என ரசிகர்கள் குறை சொல்லி வந்த நிலையில், இந்தப்படத்தை ஹீரோயினுக்காகவே பார்க்கலாம் என ரசிகர்கள் தியேட்டரில் விசில் அடித்து வருகின்றனர். இந்த வாரம் வெளியான தமிழ் படங்களை விட பிரேமலு படத்தை ஏகப்பட்ட ரசிகர்கள் குடும்பத்துடன் தியேட்டருக்கு சென்று பார்த்து வருகின்றனர்.
பிரேமலு படத்தின் கதை என்னவென்றால் லண்டனுக்கு போக வேண்டும் என விருப்பப்படும் நாயகன் அதற்கான விசா கிடைக்காமல் திணறி வரும் நிலையில் கேட் எக்ஸாம் படிப்புக்காக படிக்கலாமே என ஹைதராபாத்துக்கு நண்பனுடன் செல்கிறார்.
அங்கே படித்துக் கொண்டே லண்டனுக்குப் போகவும் முயற்சி செய்கிறார் ஹீரோ. அப்போது தனது கோச்சிங் செண்டரை நடத்துபவர்களின் திருமணத்துக்காக ஒரு குக் கிராமத்துக்கு செல்கிறார். அங்கே நடக்கும் திருமணத்தில் ஹீரோயினை சந்திக்கிறார்.
ஹீரோயினின் குறும்புத்தனங்களை பார்த்த மாத்திரத்திலேயே காதலில் விழுகிறார். மமிதா பைஜு ஐடியில் வேலை பார்த்து வரும் நிலையில், அவருக்கு வருங்கால கணவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என செல்ல அதில் ஒரு குவாலிஃபிகேஷனும் இல்லாத நிலையில், அவர் காதலியை கரம் பிடித்தாரா இல்லையா என்பதை காமெடி மற்றும் காதலுடன் நகரும் படத்தை இளைஞர்கள் முதல் குடும்பம் வரை ரசிக்கும் வரையில் உருவாக்கி உள்ளனர்.
வணங்கான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருந்த மமிதா பைஜு அந்த படத்தில் இருந்து விலகி விட்டார். அடுத்த வாரம் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாக உள்ள ரெபல் படத்திலும் மமிதா பைஜு நடித்துள்ளார் என்பது கூடுதல் தகவல்.
மலையாள படம் 100 கோடி வசூல் செய்த நிலையில், ஜி.வி. பிரகாஷ் படம் எவ்வளவு வசூல் செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.