சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த மலையாள டப்பிங் படங்கள் – ஒரு பார்வை

By Sankar Velu

Published:

தமிழில் இருந்து சூப்பர்ஹிட்டான பல படங்கள் இந்தி, மலையாளம், தெலுங்கு திரையுலகிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதே போல் பிற மொழிகளில் இருந்தும் பல படங்கள் தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் மலையாளத்தில் இருந்து தமிழில் டப் செய்யப்பட்ட படங்களில் பல சூப்பர்ஹிட் ஆகியுள்ளன. அவற்றில் ஒரு சிலவற்றைப் பார்ப்போம்.

லூசிஃபர்

2019ல் பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் வெளியான படம். மோகன்லால், விவேக் ஓபராய், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், இந்திரஜித் சுகுமாரன், சாய்குமார் உள்பட பலர் நடித்துள்ளனர். தீபக் தேவ் இசை அமைத்துள்ளார்.

படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்து 200 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்த முதல் மலையாளப் படம் இதுதான். தமிழிலும் இந்தப் படத்திற்கு ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்தனர்.

வாசுகி

Vasuki
Vasuki

2016ல் ஏ.கே.சாஜன் இயக்கிய படம்.
நயன்தாரா, மம்முட்டி, ஷீலு ஆபிரகாம், அஜூ வர்கீஸ், வினய் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

உருமி

Urumi
Urumi

2012ல் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் வெளியான படம். பிருத்விராஜ், பிரபுதேவா, ஆர்யா, ஜெனிலியா, நித்யாமேனன், வித்யாபாலன் உள்பட பலர் நடித்துள்ளனர்.

தீபக் தேவ் இசை அமைத்துள்ளார். பிரபுதேவாவுக்கு நீண்ட இடைவெளிக்கு வந்த படம் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. அதே போல் படமும் ஹிட் அடித்தது.

அரண்

Aran
Aran

2006ல் மேஜர் ரவி இயக்கத்தில் வெளியான படம். மோகன்லால், ஜீவா, கோபிகா, லட்சுமி கோபாலசாமி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜோஷ்வா ஸ்ரீதர் இசை அமைத்துள்ளார்.

படத்தில் மோகன்லால், ஜீவா நடிப்பு பிரமாதம். ரசிகர்கள் கொடுத்த வரவேற்பால் படம் ஹிட் அடித்தது.

சிறைச்சாலை

Siraichalai
Siraichalai

1996ல் வெளியான படம். பிரியதர்சன் இயக்கத்தில் வந்தது. மோகன்லால், பிரபு, தபு, அம்ரிஷ் பூரி, நெடுமுடி வேணு, சீனிவாசன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் ஒவ்வொன்றும் பட்டையைக் கிளப்பும் ரகங்கள். படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பின.

செம்பூவே பூவே என்ற பாடல் இந்தப் படத்தில் தான் வந்தது. தமிழ் ரசிகர்களுக்கு இந்தப் படத்தில் காட்டப்படும் சிறைச்சாலையும், கதையும் ரொம்பவே பிடித்துப் போனது. பெரும் வரவேற்பு கொடுத்து வெற்றியைப் பெறச் செய்தனர்.