இரண்டு படங்களை அடுத்தடுத்து மிஸ் செய்த மாளவிகா மோகனன்: அதிர்ச்சி தகவல்

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்த மாளவிகா மோகனன் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தாலும் அந்த வாய்ப்புகள் உறுதி செய்யப்படாமல் நழுவிக் கொண்டே வருகிறது சூர்யா மற்றும் ஹரி இணையும் படத்தில் மாளவிகா மோகனன்…


9467ae2690ff279c90980a64aae4c373

மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முடித்த மாளவிகா மோகனன் அடுத்தடுத்து வாய்ப்புகள் வந்தாலும் அந்த வாய்ப்புகள் உறுதி செய்யப்படாமல் நழுவிக் கொண்டே வருகிறது
சூர்யா மற்றும் ஹரி இணையும் படத்தில் மாளவிகா மோகனன் தான் ஹீரோயின் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த வாய்ப்பு கிட்டத்தட்ட நழுவி விட்டதாக கூறப்படுகிறது

அதேபோல் கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கும் படத்தில் நடிக்க மாளவிகா மோகனன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் தற்போது இந்த பேச்சு வார்த்தை நின்று விட்டது என்றும் படக்குழுவினர் தற்போது வேறு ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது

மாஸ்டர் படம் முடிவதற்கு முன்பே இரண்டு மூன்று படங்கள் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வரை ஒரு படத்திலும் மாளவிகா மோகனன் புக் ஆகவில்லை என்பது தான் உண்மை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன